For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சொல்வது என்ன? ஜஸ்ட் 16 பாயிண்ட்டுகளில் முழு விளக்கம்

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு 16 பாயின்ட்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு 16 பாயின்ட்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று முக்கிய தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு கர்நாடகாவுக்கு சாதகமாகவும் தமிழகத்துக்கு பாதகமாகவும் இருந்தது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இதோ..

Cauvery Waters verdict: Explained in 16 points

1 தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் தர கர்நாடகாவுக்கு உத்தரவு

2 பெங்களூரு குடிநீர் மற்றும் தொழிற்சாலைகைளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கீடு

3 தமிழகம்- கர்நாடகா எல்லையிலுள்ள பிலிகுண்டுலு பகுதிக்கு ஆண்டுதோறும் கர்நாடகா 177.25 டிஎம்சி தண்ணீர் வருமளவுக்கு காவிரி நீரை வழங்க வேண்டும்.

4 எந்த மாநிலமும் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது.

5 தமிழகத்தில் நிலத்தடி நீர் 20 டிஎம்சிக்கு கீழே செல்லும் போது தமிழகம் கூடுதலாக 10 டிஎம்சி கன அடி தண்ணீர் பெற சுப்ரீம்கோர்ட் அனுமதியளித்துள்ளது.

6 பெங்களூரு 4.2 டிஎம்சி தண்ணீரை கூடுதலாக பெறும். சுதந்திரத்திற்கு முந்தைய ஒப்பந்தம் செல்லுபடியாகும். பெங்களூரு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கர்நாடகா கூடுதல் நீரை பெறும்.

7 தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி கேரளாவுக்கு 30 டிஎம்சி தண்ணீரும் புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீரும் வழங்கப்படும்.

8 காவிரி நீர் பகிர்வு தொடர்பாக 1921ஆம் ஆண்டு ஒப்பந்தங்களை கர்நாடகா 1947 ஆம் ஆண்டில் அல்லது 1956 ஆம் ஆண்டில் செயல்படுத்ததால் தற்போது கேள்வி கேட்க முடியாது.

9 1921ஆம் ஆண்டுக்கான ஒப்பந்தம் 1971 ஆம் ஆண்டில் முடிவடைந்தது, இப்போது நீர் பகிர்வுக்கான அடிப்படையாக இருக்கமுடியாது.

10 ஆறுகள் நாட்டின் சொத்து. எந்த ஒரு தனி மாநிலமும் அதற்கு உரிமை கொண்டாட முடியாது.

11 பெங்களூரு காவிரி ஆற்றுக்கு வெளியே இருக்கிறது என்றும் 60% நிலத்தடி நீரை நம்பியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 கேரளாவுக்கு 30 டி.எம்.சி. காவிரி நீர் வழங்க தீர்ப்பாயத்தின் உத்தரவு தொடரும்

13 புதுச்சேரியின் புவிசார் நிலையை கருத்தில் கொண்ட இரண்டாவது பயிர் சாகுபடிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 43 ஆயிரம் ஏக்கர் பயிரிடலாம். இருப்பினும் தண்ணீர் ஒதுக்கீடு இல்லை.

14 கர்நாடகா குறு நிவாரணத்திற்கு உரிமை உள்ளது.

15 1924 ம் ஆண்டு மேட்டூர் அணை உடன்படிக்கை 1974 ஆம் ஆண்டில் முடிவடைந்தது. இப்போது நீர் ஒதுக்கீடு கொள்கை "சமமான ஒதுக்கீடு" அடிப்படையில்தான் ஆனால் முதன்மையானது அல்ல.

16 காவிரி நதி நீர் வழங்கல் தொடர்பான 1892 மற்றும் 1924 ஒப்பந்தங்கள் "அரசியல் ஏற்பாடுகள்" அல்ல ஆனால் பொது நலன்களை அடிப்படையாகக் கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The court said that Karnataka would get an additional 14.75 tmc ft of Cauvery water. Here are the key observations of the Cauvery Waters verdict delivered by the Supreme Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X