For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கும் சபாநாயகர் முடிவில் தலையிட முடியும்: ஹைகோர்ட் தலைமை நீதிபதி விளக்கம்

18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கை விசாரிப்பது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி விளக்கம் அளித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவுக்கு படம் வைத்தது தொடர்பான வழக்கில் சபாநாயகர் உத்தரவில் நீதிமன்றம் தலைமையிட முடியாது என்று நீதிபதி கூறியிருந்த நிலையில் அதே சபாநாயகரால் உத்தரவிடப்பட்ட 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கை மட்டும் விசாரிப்பது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி விளக்கம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு எடப்பாடி அணியும் ஓபிஎஸ் அணியும் ஒன்றிணைந்ததற்கும் சசிகலா மற்றும் தினகரனை ஒதுக்கியதற்கும் எதிர்ப்பு தெரிவித்து தினகரன் தலைமையில் 18 எம்எல்ஏக்கள் தனித்து செயல்பட்டு வந்தனர்.

அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று கொள்கிறோம் என்று 18 எம்எல்ஏக்கள் தனித்தனியாக மனு அளித்தனர்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்

அதிமுக கொறடா உத்தரவை மீறியதாக 18 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 பேரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பு

இந்நிலையில் கடந்த ஆண்டு அதிமுக இரண்டாக பிளவுப்பட்ட போது ஓபிஎஸ் மற்றும் 11 எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தனர். தற்போது எடப்பாடி அணியில் இணைந்துள்ள அவர்களையும் கொறடா பேச்சை மீறியதால் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது.

ஓபிஎஸ் வழக்கு

ஓபிஎஸ் வழக்கு

சபாநாயகர் உத்தரவை ரத்து செய்ய கோரி 18 எம்எல்ஏக்கள் தொடுத்த வழக்கில் விசாரணை முடிவடைந்துவிட்டது. எனினும் ஓபிஎஸ் தரப்பு தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

தலையிட முடியாது

தலையிட முடியாது

தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு படம் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சபாநாயகர் படம் திறந்து வைப்பது என்று எடுத்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மறுப்பு தெரிவித்தார்.

ஏன் விசாரணை ?

ஏன் விசாரணை ?

சபாநாயகர் எடுத்த முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்கிற போது அவரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தொடுத்த வழக்கை மட்டும் இந்த நீதிமன்றம் ஏன் விசாரணை எடுத்துக் கொண்டது என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.

நீதிமன்றம் தலையீடு

நீதிமன்றம் தலையீடு

தனி மனித உரிமையில் பாதிப்பு ஏற்படும்படியாக சபாநாயகர் முடிவு இருந்தால் மட்டுமே நீதிமன்றம் அதில் தலையிடும். 18 எம்எல்ஏக்களின் தகுதிநீக்க விவகாரம் தனி மனித உரிமை தொடர்பானது என்பதாலேயே நீதிமன்றம் தலையிட்டது என்றார் தலைமை நீதிபதி.

English summary
Chennai HC Chief Justice Indira Banerjee explains that why they hear MLAs disqualification case though it was ordered by Speaker.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X