For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் இரவே ஸ்டிரைக் வாபஸ்- சிஐடியூ அறிவிப்பு

தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் இரவே ஸ்டிரைக் வாபஸ் பெறுகிறோம் என்று சிஐடியூவை சேர்ந்த சவுந்திரராஜன் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை : தமிழக அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் இன்று இரவே வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம் என்று சிஐடியூவை சேர்ந்த சவுந்திரராஜன் தெரிவித்தார்.

2.57 சதவீத ஊதிய உயர்வு, ஓய்வூதிய தொகை ஆகியவற்றை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 6-ஆவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

CITU says that if the government calls for talks, then we will get back the strike

இதனால் போதிய பேருந்துகள் இல்லாமல் பயணிகள் அவதிஅடைகின்றனர். பொங்கல் பண்டிகை நெருங்கும் நேரத்தில் பஸ் ஸ்டிரைக்கால் ஊர் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

பல்வேறு கோரிக்கைகளை உடனே தீர்க்கக் கோரி போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பல்லவன் இல்லத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது சிஐடியூவை சேர்ந்த சவுந்திரராஜன் கூறுகையில், பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு எங்களை அழைத்தால் இன்றிரவே ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம்.

அமைச்சர், நீதிபதியின் கார் ஓட்டுநருக்கு தரும் சம்பளம் பேருந்து ஓட்டுநருக்கு தர வேண்டும் என்று சவுந்திரராஜன் தெரிவித்தார்.

English summary
CITU's Soundarrajan says that if the government calls for talks, then we will get back the strike.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X