நெல்லை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கோயில்களுக்கான புதிய செயலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: திருநெல்வேலியில் தொடங்கப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கோயில்களுக்கான புதிய செயலியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்துவைத்தார்.

நெல்லையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எம்ஜிஆர், ஜெயலலிதா படத்திற்கு முதல்வர் பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

CM Edappadi Palanisamy launched a temple app

மேலும் நெல்லையில் ரூ.528.91 கோடி மதிப்பீட்டில் 142 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். 34,655 பயணிகளுக்கு ரூ.87.74 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கியுள்ளார். மேலும் நெல்லை மாவட்டத்தில் உள்ள கோயில்களை தெரிந்து கொள்ளும் வகையில் புதிய செயலியை முதல்வர் அறிமுகம் செய்து வைத்துள்ளார். 'talking temples of tirunelveli' என்ற புதிய செயலியை முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது முதல்வர் எடப்பாடி பேசுகையில், பலரின் துணையோடு ஆட்சியை கலைக்க நினைத்தால் அது பகல் கனவாகிவிடும். குறை கூறுவோர் கூறி கொண்டுதான் இருப்பார்கள். அதிலும் திமுக அதிகமாக குறை கூறுகிறது.

ஆக்கப்பூர்வமான திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் இதுவரை பேசியது கிடையாது என்று கடுமையாக விமர்சித்தார். திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படும் என்றும் அறிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
CM Edappadi Palanisamy has introduced a temple app in Nellai MGR Centenary function.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற