சசிகலா நியமன ரத்து எதிரொலி.... கரூரில் முதல்வரின் உருவபொம்மை எரித்துப் போராட்டம்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

கரூர்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவபொம்மையை எரித்த 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

நேற்று சென்னையை அடுத்துள்ள வானகரத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்து பொதுக்குழு கூட்டம் நடத்தின. அப்பொதுக்குழு கூட்டத்தில், பொதுச்செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தது ரத்து உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 CM Edappadi Palanisamy's effigy fired at Karur

அதில், தினகரன், கட்சியின் பொறுப்புகளிலிருந்து நீக்குவது செல்லாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தினகரன் ஆதரவாளர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். அதில், கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கோஷங்களை முழங்கினர். அதையடுத்து 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ex.Minister Senthil Balaji's supporters fired effigy of CM Edappadi Palanisamy at Karur and they were arrested.
Please Wait while comments are loading...