For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகம்: அதிமுக-39%, திமுக-26%, பாஜக-16%, காங்-9%, பிற கட்சிகளுக்கு 10% ஆதரவு- சி.என்.என். ஐ.பி.என்

|

சென்னை: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் அதிமுக அதிக வாக்குகளைப் பெற வாய்ப்பிருப்பதாக சி.என்.என். ஐ.பி.என் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் முடிவுகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

16வது லோக்சபா தேர்தல் ஒன்பது கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இன்று கடைசி கட்டத் தேர்தல் நடந்து முடிந்ததையடுத்து, எக்ஸிட் போல் முடிவுகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

அதன்படி, ஐபிஎன் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் முடிவுகளில், தமிழகத்தில் அதிமுக முதலிடத்தில் உள்ளது.

அதிமுக...

அதிமுக...

அதன்படி, அதிமுகவிற்கு 39 சதவீதம் வாக்குகள் கிடைக்கலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் 32 சதவீதமாக இருந்துள்ளது.

திமுக...

திமுக...

அதிமுகவை அடுத்து திமுக உள்ளது. அக்கட்சிக்கு 26 சதவீதம் வாக்குகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. தேர்தலுக்கு முந்தைய நிலவரப்படி 23 சதவீதம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பாஜக....

பாஜக....

மூன்றாவது இடத்தில் பாஜக உள்ளது. அதற்கு 16 சதவீதம் வாக்குகள் கிடைக்கலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பின் படி 22 சதவீதம் வாக்குகள் கிடைக்கலாம் எனக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சி....

காங்கிரஸ் கட்சி....

காங்கிரஸ் கட்சிக்கு எக்ஸிட் போல் நிலவரப்படி 9 சதவீத வாக்குகள் கிடைக்கலாம் என்றும், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் ணிப்பின் படி 12 சதவீத வாக்குகள் கிடைக்கலாம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பிற கட்சிகள்...

பிற கட்சிகள்...

இம்முறை ஐந்து முனைப் போட்டி தமிழகத்தில் நிலவியது. எனவே, மீதமுள்ள கட்சிகள் 10 சதவீதம் வாக்குகளைப் பெறலாம் என்றும், தேர்தலுக்கு முந்தைய கணிப்பின் படி 11 சதவீத வாக்குகள் கிடைக்கலாம் என்றும் ஐ.பி.என். எக்ஸிட் போல் முடிவுகள் கூறுகின்றன.

English summary
CNN IBN exit poll survey says that ADMK will majority seats in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X