பெண் போல பேசி ஏமாற்றிய கல்லூரி மாணவர் கொலை - தலைமறைவாக இருந்த போலீஸ் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பெண்ணைப் போல பேசி ஏமாற்றிய போலீஸ் கைது...வீடியோ

  விருதுநகர்: காதலிப்பதாக கூறி பெண்ணைப் போல செல்போனின் பேசி ஏமாற்றிய நபரை கொலை செய்த போலீஸ் கான்ஸ்டபிள் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

  விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வ.புதுப்பட்டி கிருஷ்ணாம்பேட்டை பகுதியில், கடந்த மாதம் 24ஆம் தேதி, போதா குளம் கண்மாயில் அய்யனார் என்ற கல்லூரி மாணவர் முகம் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

  Constable arrest connection youth murder case

  இந்த வழக்கில் மூன்றுபேரை கைது செய்த நிலையில், தலைமறைவான முக்கிய குற்றவாளியான போலீஸ்காரர் கண்ணனை தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

  ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாம்பேட்டையைச் சேர்ந்த போலீஸ்காரர் கண்ணன் எண்ணூரில் பணியாற்றி வந்தார். இளைஞரான கண்ணனின் செல்போனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம் பெண் ஒருவர் பேசினார்.

  அந்தப் பெண் கொஞ்சி பேசியதில் கிறங்கிப் போனார் கண்ணன். ஒரே ஊரைச் சேர்ந்தவர் என்பதால் அந்த பெண்ணைப் பார்க்க சென்ற கண்ணன் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதற்குக் காரணம் கண்ணனிடம் செல்போனில் பேசியது அய்யனார் என்பது தெரியவந்ததே.

  அய்யனார் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறவே, பலரும் கண்ணனை கேலி செய்துள்ளனர். இதனால் கண்ணன் விஷம் குடித்துள்ளார். இதனையடுத்தே கண்ணனின் தம்பி விஜயகுமார், தமிழரசன் ஆகியோர் அய்யனாரை கடந்த 24ஆம் தேதி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

  கண்ணனும் அய்யனாரும் நண்பர்களாக இருந்துள்ளனர். அய்யனாருக்கு உடல் ரீதியாக மாற்றம் ஏற்பட்டுள்ளதாம். திருநங்கையாக மாறத் தொடங்கிய அய்யனாருக்கு கண்ணன் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இது தெரிந்தேதான் பழகினார்கள் என்றும், அது வேறு மாதிரியான உறவு என்றும் கூறி வருகின்றனர். அய்யனாரின் தொல்லை எல்லை மீறியதாக தெரிகிறது.

  இதனையடுத்தே அய்யனாரை கொலை செய்துள்ளனர். கொலையில் மூன்று பேரை கைது செய்த நிலையில், கடந்த 12 நாள்களாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான காவலர் கண்ணனை, வத்திராயிருப்பு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A 22-year-old man, Ayyanar, was hacked to death in W. Pudupatti near Srivilliputtur on January 24 night reportedly for having cheated a police constable, Kannan Kumar, by impersonating as a girl in social media.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற