For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைகோவைப் போல விஜயகாந்த், வாசனை ஓரணியில் திரட்ட இடதுசாரிகள் வியூகம்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: வைகோவை வளைத்தது போல இதர எதிர்க்கட்சித் தலைவர்களையும் தங்களது அணியில் ஒன்றுதிரட்டுவது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் இன்று சென்னையில் ஆலோசனை நடத்தினர்.

சட்டசபை தேர்தலில் திமுக அணியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட மதிமுக பொதுச்செயலர் வைகோவை திடீரென மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் திடீரென சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து இடதுசாரிகளுடன் இணைந்து செயல்படுவோம் என்று வைகோ அறிவித்திருந்தார்.

CPI leaders meet CPM state leadership

இதனைத் தொடர்ந்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரையும் அடுத்தடுத்து தங்களது அணியில் இணைப்பதற்கான முயற்சிகளை மார்க்சிஸ்ட் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

CPI leaders meet CPM state leadership

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர்கள் கே.சுப்பராயன், மு.வீரபாண்டியன் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோரை இன்று சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சந்தித்து பேசினர்.

இச்சந்திப்பின் போது விஜயகாந்தையும், வாசனையும் சந்தித்துப் பேசுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இப்படி எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டி அதிமுக, திமுகவுக்கு மாற்றான ஒரு வலுவான கூட்டணியை அமைப்பது குறித்தும் இன்றைய சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.

English summary
Tamilnadu CPI leaders today met CPM state leaders ahead of to form third front for Tamilnadu assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X