For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

4 மாநில தேர்தல்.. பெட்ரோல் விலையில் திடீர் குறைப்பு.. பாஜகவின் ஸ்டண்ட் அரசியலா இது?

பல மாநில தேர்தலை கருத்தில் கொண்டுதான் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பெட்ரோல், டீசல் விலையில் குறைப்பு.. அருண் ஜேட்லி அறிவிப்பு

    சென்னை: பல மாநில தேர்தலை கருத்தில் கொண்டுதான் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைக்கிறது.

    பெட்ரோல், டீசல் விலையில் 2.50 ரூபாயை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. பாஜக மீது பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக கடுமையான குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

    பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் பெட்ரோல், டீசல் விலை தினமும் விலை உயர்ந்து கொண்டே சொல்கிறது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் அதற்கு ஒரு சின்ன ஆறுதல் அளித்துள்ளது மத்திய அரசு.

    குறைத்தனர்

    குறைத்தனர்

    இந்த நிலையில் பல கோரிக்கைகளுக்கு பிறகு பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையில் 2.50 ரூபாயை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையில் 1.50 ரூபாய் குறைத்து இருக்கிறது. இதேபோல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையில் 1 ரூபாய் குறைத்து இருக்கிறது.

    மாநில அரசு

    மாநில அரசு

    அதோடு நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி பேசும் போது மாநில அரசுகள் தங்கள் வரியை குறைக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் இனி எல்லாம் மாநில அரசுகளின் கைகளில்தான் இருக்கிறது. மத்திய அரசு விலையை குறைத்துள்ளது என்று கூறி மாநில அரசுகளை பெட்ரோல் டீசல் விலை பக்கம் கை காட்டி இருக்கிறார்.

    தேர்தல் ஸ்டண்ட்

    தேர்தல் ஸ்டண்ட்

    இதற்கு முக்கிய காரணம் உள்ளது. இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் முக்கியமான மாநிலங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது. மிசோரம், தெலுங்கானா, சட்டிஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதனால்தான் இவ்வளவு நாள் பெட்ரோல் விலையை ஏற்றிவிட்டு தேர்தல் நெருங்கியவுடன் விலையை குறைப்பதை போல குறைத்து இருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளது.

    சாதகமான நிலை

    சாதகமான நிலை

    ஏற்கனவே மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியுடன் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைக்காது என்று அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதேபோல் பாஜக ஆளும் மாநிலங்களிலும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பாஜகவிற்கு தற்போது வடமாநிலங்களில் கொஞ்சம் சாதகமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது.

    English summary
    The decline in Petrol and Diesel prices: Opponents claims that it is a mere election stunt.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X