For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்.கே. நகரில் ஆட்டோவில் போய் அனல் பறக்கும் பிரச்சாரம் செய்யப்போறாராமே தீபா!

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள தீபா நாளை முதல் வீதி வீதியாக அனல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார். தீபா நாளை முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். அவர் ஆட்டோவில் பிரச்சாரம் செய்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ்க்கு எதிராக அவர் பிரச்சாரம் செய்ய மாட்டார் என்றும் டிடிவி தினகரனையும், திமுகவையும் விமர்சனம் செய்தே பிரச்சாரம் செய்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்.கே. நகரில் எம்எல்ஏவாகவும் தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா உடல் நலமின்றி மரணம் அடைந்தார். இதனையடுத்து இந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட 127 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தீபா மனு தாக்கல்

தீபா மனு தாக்கல்

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா முதன் முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை அவர் வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ளார். நாளை முதல் அவர் பிரச்சாரத்தை தொடங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தீபா பிரச்சாரம்

தீபா பிரச்சாரம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் போட்டியிட இந்த தொகுதி மக்கள்தான் காரணம். ஜெயலலிதாவின் வாரிசு யார் என்பதை தமிழக மக்களுக்கும், அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் இந்த தொகுதி மக்கள் நிரூபிப்பார்கள் என்று கூறியுள்ளார் தீபா. இந்த இடைத்தேர்தலில் தீபா வாங்கும் ஓட்டுக்கள்தான் அவரது தலையெழுத்தையே நிர்ணயம் செய்யப் போகும் தேர்தல் என்பதால் பிரச்சாரத்தில் தீவிர கவனம் செலுத்தப் போகிறார்.

வேன், ஆட்டோவில் பிரச்சாரம்

வேன், ஆட்டோவில் பிரச்சாரம்

தீபா நாளைமுதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். அவர் பெரிய தெருக்களில் வேன் மூலம் சென்று பிரசாரம் செய்கிறார். குறுகிய சந்துக்களில் ஆட்டோவில் சென்று பிரசாரம் செய்கிறார்.

அனல் பறக்கும் பிரச்சாரம்

அனல் பறக்கும் பிரச்சாரம்

ஆட்டோக்கள் கூட செல்ல முடியாத குறுகிய தெருக்களில் வீடு வீடாக சென்று அவர் பிரச்சாரம் செய்கிறார். இந்த தேர்தலில் டி.டி.வி. தினகரனையும், தி.மு.க.வையும் தாக்கி அவர் பிரசாரம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த கையோடு பிரச்சாரத்தை தொடங்கி விட்டதால் இடைத்தேர்தல் களம் அனல் பறக்கிறது. தீபாவின் பிரச்சாரம் வாக்காளர்களை கவருமா? அவை வாக்குகளாக மாற்றுமா? பார்க்கலாம்.

வேனை விட்டு இறங்காத ஜெ.,

வேனை விட்டு இறங்காத ஜெ.,

முதல்வராக இருந்த ஜெயலலிதா பிரத்யேக வடிவமைக்கப்பட்ட வேனில் அமர்ந்து கொண்டு வீதி வீதியாக பிரச்சாரம் செய்தார். அவரது அண்ணன் மகள் தீபா வேன், ஆட்டோ மூலம் பிரச்சாரம் செய்வதோடு வீதி வீதியாக நடந்து சென்றும் பிரச்சாரம் செய்யப் போகிறார். கூடவே

English summary
Deepa who is contesting in RK Nagar is getting ready to campaign in RK Nagar.she said the manifesto would be released on the day she begins her campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X