ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்தவர்களுக்கு உப்பு பாக்கெட்.. பிளிப்கார்ட்டுக்கு அல்வா கொடுத்த ஊழியர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விலையுயர்ந்த ஸ்மார்ட் போன்களை திருடி அதற்கு பதில் உப்பு பாக்கெட்டை கொடுத்து பிளிப்கார்ட் நிறுவனத்தை ஏமாற்றிய பிளிப்கார்ட் ஊழியர்கள் இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

நாட்டின் முன்னணி ஈகாரமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் பெங்களுரை தலைமையாகக் கொண்டு இந்தியா முழுவதும் வர்த்தகம் செய்கிறது. அந்த நிறுவனத்தின் சென்னை தேனப்பேட்டை பகுதி டெலிவரி ஊழியராக பணி புரிந்து வருபவர்கள் ஜெய்கணேஷ் மற்றும் சாம் திவாகர். இவர்கள் பிளிப்கார்ட்டில் போலி பெயரில் இல்லாத முகவரியை கொடுத்து 6 மொபைல் போன்களை ஆர்டர் செய்துள்ளனர்.

 Delivery boy cheating Flipkart products

டெலிவரிக்காக அந்த ஸ்மார்ட் போன்கள் அவர்களிடம் வந்ததும் பார்சலில் வந்த போன்களை திருடிவிட்டு அதற்கு பதில் பார்சலில் டம்மி செல்போனையும், மீதம் உள்ள பார்சல்களில் கல்உப்பு பொட்டலங்களையும் வைத்து பார்சலை பிரிக்காதது போல் வடிவமைத்துள்ளார்.

சம்பந்தபட்ட முகவரில் ஆட்கள் இல்லை என்று மீண்டும் பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு அந்த பார்சல்களை திருப்பி அனுப்பி உள்ளனர். இவ்வாறு திருடப்பட்ட போன்களை வேறு நபர்களுக்கும் விற்றிருக்கிறார்கள்.

இந்தமோசடி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இருவரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை காவல்துறையினர்‌ தேடி வருகிறார்கள். திருடப்பட்ட ஸ்மார்ட் போன்களின் மொத்த மதிப்பு 2 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
police complaints aganist Delivery boy's cheating Flipkart products in chennai
Please Wait while comments are loading...