For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லை அருகே பரவும் டெங்கு - அச்சத்தில் பொதுமக்கள்

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை அருகே உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

நெல்லை அருகே உள்ளது வெங்கடாலசபுரம் கிராமம். இங்கு கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் பலர் வீடுகளில் முடங்கி கிடக்கி்ன்றனர்.

அந்த பகுதியை சேர்ந்த கண்ணன், பேச்சிம்மாள், உலகம்மாள், சுடலைகண்ணு, உலகுராஜ், மகேஸ்வரி, குருபிரியா, பேச்சியம்மாள், சங்கீதா, பார்வதியம்மாள், ஜெயலட்சுமி, சுடலைகண்ணு, ராஜா, சக்தி, சத்யா, பத்திரகாளி, பூலம்மாள், உலகம்மாள், உச்சிமாகாளி, முருகேஷ், உலகநாதன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றனர்.

இதில் இந்து என்று 8 வயது சிறுமி பலியானார். இந்த காய்ச்சல் தலைவலியோடு வருகிறது. சிலருக்கு வாந்தி ஏற்பட்டு ரத்தம் வருகிறது. மலம் கருப்பாக போகிறது. இறக்கும் தருவாயில் வயிறும், கண்ணும் வீங்குகிறது.

மூச்சி திணறுகிறது என பாதிப்பை நேரில் பார்த்தவர்கள் திகிலுடன் சொல்கி்ன்றனர். காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட்டதும் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்தப் பரிசோதனை செய்தனர். இதில் டெங்கு உள்ளிட்ட எந்த அறிகுறியும் தெரியவில்லை.

English summary
Dengue fever is spreading fast in Nellai district. More than 100 families have been suffered by the dengue fever.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X