திமுகவினரே விலை போனதாக சொன்ன துரைமுருகன்... என்ன செய்யப் போகிறது தலைமை... தயாநிதி அழகிரி கேள்வி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : திமுகவினரே காசுக்குவிலை போனதாக சொன்ன துரைமுருகன் மீது கட்சித் தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

Dhaya Alagiri seeks action against Duraimurugan

ஆர்கே நகர் தேர்தல் முடிவுகள் நேற்று வெளிவரத் தொடங்கிய நிலையில், முன்னிலை நிலவரம் குறித்து அண்ணா அறிவாலயத்தில் திமுக முதன்மை செயலாளர் துரை முருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் ஆர்.கே நகர் தேர்தலில் திமுக கட்சியின் வாக்குகளையும் பணம் சாப்பிட்டுவிட்டது. ஆர்.கே நகரில் ஜனநாயகம் தோற்றுவிட்டது, பணநாயகம் வென்றுவிட்டது. பணத்தின் காரணத்தால் திமுக தோற்றுவிட்டது என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் துரைமுருகனை கருத்தை சுட்டிக்காட்டி அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் தி.மு.க வினரே காசுக்கு விலை போனதாக, தி.மு.க வின் முதன்மைச்செயலாளர் துரைமுருகன் கூறியது தி.மு.வின் அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகள் மற்றும் மனதை புண்படுத்துவது போல் உள்ளது. தலைமை என்ன செய்ய போகிறது என்ற கேள்விகளுடன் தி.மு.க தொண்டர்கள். முருகனுக்கு அரோகரா ! என்று போட்டு டுவீட்டை முடித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former union minister Alazgiri's son raises question about Duraimurugan's ccomment over RK Nagar elections and asks the party would now take what sort of action against him?

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற