
பாத்ரூமில் "சத்தம்".. நைட் 11 டூ விடிகாலை 3 மணி வரை.. வாசலில் காவலுக்கு நின்ற மனைவி.. யாரிந்த "பகுடு"
ஆற்காடு: நடுத்தர வயதுள்ள பெண் ஒருவர், தனித்து வாழ்வது என்பது இன்றளவும் மிகவும் சவாலாக உள்ளது.. ஒருபக்கம் பாதுகாப்பின்மையால், ஆபத்தில் சிக்கி கொள்வதும், மற்றொருபக்கம், சில "பெண்களே" இதுபோன்ற அபலைகளுக்கு எமனாக அமைந்துவிடுவதும் உண்டு. அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று ஆற்காட்டில் நடந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மாசாப்பேட்டையை சேர்ந்தவர் பாஸ்கர்.. பகுடு என்று இவருக்கு ஒரு பட்டப்பெயர் இருக்கிறதாம்..
33 வயதான பாஸ்கர் ஒரு கஞ்சா வியாபாரி. மனைவி பெயர் துர்கா.. 28 வயதாகிறது.. இவர்கள் வசித்து வரும் அதே பகுதியில் 40 வயது பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார்..
என்ன விட அழகா நீ? கஞ்சா கணவனை ஏவி தாய் மகளை சிதைத்த விபரீத சைக்கோ துர்கா! பதறிப் போன ராணிப்பேட்டை!

ஷூ கம்பெனி
அவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்.. கருத்துவேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து வந்துவிட்டார். இவர்கள் பிரிந்து 8 வருடமாகிறது.. தன்னுடைய ஒரே மகளை அழைத்துக் கொண்டு, 8 வருடத்துக்கு முன்பே, ஆற்காட்டில் குடியேறினார்.. மகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, ஆற்காட்டில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார்... மகளையும் அங்குள்ள பள்ளியில் படிக்க வைத்து வருகிறார்.. அந்த மகளுக்கு இப்போது 17 வயதாகிறது.. பிளஸ் 2 படிக்கிறார்.

அய்யோ துர்கா
கணவனை பிரிந்து அந்த பெண் தனித்து வாழ்ந்து வந்த நிலையில், பாஸ்கர் இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டதாக தெரிகிறது.. தேவையேயில்லாமல் அடிக்கடி அந்த பெண்ணிடம் சென்று வலிய போய் பேச்சு கொடுப்பாராம். ஆனால் அந்தப்பெண், பாஸ்கரை கண்டுகொள்ளாமல் விரட்டி வந்ததாக கூறப்படுகிறது... அதேபோல, பாஸ்கர் மனைவி துர்காவுக்கும், அந்த பெண்ணுக்கும் அவ்வப்போது தகராறும் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் பாஸ்கர்தான்.

அழகே அழகே
எப்ப பார்த்தாலும், அந்த பெண்ணுக்கு பாஸ்கர் தொந்தரவு தந்தாலும், மனைவி துர்காவிடமும் அவரை பற்றி வர்ணித்து கொண்டே இருப்பாராம்.. இதனால் கோபமடைந்த துர்கா, அப்பெண்ணிடம் சென்று, "நீஅழகா இருக்கிறதால்தான், என் கணவர் அடிக்கடி உன்னை பற்றி சொல்லிக் கொண்டே இருக்கிறார்... உன்னால்தான் எங்களுக்குள் பிரச்சனை வருகிறது... வீட்டை காலி செய்து விட்டு, வேறு எங்காவது போய்விடு" என்று மிரட்டினாராம்.. அதற்கு அந்தபெண், "உங்கள் கணவர் சரியில்லை என்றால், அவரை கண்டியுங்கள், நான் ஏன் வீட்டை விட்டு போகணும்?" என்று கேட்டுள்ளார். இது தொடர்பாகவும் இந்த 2 பெண்களுக்குள் அடிக்கடி தகராறு வந்துள்ளது.

பாத்ரூமில்
இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா வழக்கு தொடர்பாக பாஸ்கரை குண்டர் சட்டத்தில் வேலூர் ஜெயிலில் அடைத்திருந்தனர்.. கடந்த வாரம்தான், தண்டனை முடிந்து வெளியே வந்தார். ஜெயிலில் இருந்து வந்ததுமே, அந்த பெண்ணுக்கு குறி வைத்தாராம்.. எப்படியாவது அவரை அடைய வேண்டும் என்று பிளான் செய்துள்ளார்.. அதன்படி, கடந்த மாதம் 28ம் தேதி நடுராத்திரி, மனைவி துர்காவுடன், அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று கதவை தட்டியுள்ளார்... அப்போது கதவை திறந்த அந்த பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி பாஸ்கர் நுழைந்துவிட்டார்.. ஆனால், துர்கா கதவை வெளிப்புறமா பூட்டிக்கொண்டு வாசலிலேயே காவலுக்கு நின்றாராம்.

பாத்ரூம் கதவு
வீட்டிற்குள் நுழைந்த பாஸ்கர், அந்த பெண்ணை அங்குள்ள பாத்ரூமில் தள்ளி கதவை வெளிப்பகுதியில் தாழ்ப்பாள் போட்டுள்ளார். அம்மாவின் அலறல் சத்தம் கேட்டு, 17 வயது மகள் ஓடிவந்துள்ளார்.. உடனே பாஸ்கர் கத்தியை காட்டி, அந்த சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்... பிறகு, சிறுமியை நிர்வாணமாக நிற்க வைத்து, தன்னுடைய செல்போனில் வீடியோ, போட்டோவை எடுத்தாராம்.. அதற்கு பிறகு, பாத்ரூம் கதவை திறந்துவிட்டுள்ளார்..

ஷார்ப் கத்தி
அந்த பெண் கதறிக்கொண்டே வெளியே வந்தநிலையில், அவரையும் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்... பிறகு அவரையும் நிர்வாணமாக வீடியோ எடுத்ததாக தெரிகிறது. இறுதியில், அம்மா - மகள் இருவரிடமும் நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால், கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார்.. இவ்வளவு சம்பவம் நடந்து முடியும்வரை, வீட்டிற்கு வெளியே காவலுக்கு துர்கா நின்றிருந்தார்.. பிறகு பாஸ்கரும், துர்காவும் வீடு திரும்பியுள்ளனர்... இதுபோலவே, அடிக்கடி பாஸ்கர் அந்த பெண்ணை வீடியோ காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது..

துர்காவின் கொடூரம்
ஒருகட்டத்தில் மனவேதனை அடைந்த அப்பெண், ராணிப்பேட்டை மகளிர் போலீசுக்கு தற்போது போயுள்ளார்.. புகாரையும் தந்தார்.. இதையடுத்து, போக்சோ உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பலாத்காரம் செய்த பாஸ்கர், உடந்தையாக இருந்த அவரது மனைவி துர்கா ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.. அந்த பலாத்கார வீடியோ தொடர்பாகவும் அவர்களது செல்போனை கைப்பற்றி விசாரிக்கிறார்கள்..

திடீர் எஸ்கேப்
கஞ்சா பாஸ்கர் தலைமறைவு என்று முன்பெல்லாம் அடிக்கடி செய்திகள் வந்துபோகும்.. 5 வருடங்களுக்கு முன்பு, குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக ராணிப்பேட்டை எஸ்பி டாக்டர் தீபா சத்யன், கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.. அப்போது டாப் லிஸ்ட்டில் இருந்தவர்தான் பாஸ்கர்.. கஞ்சா கேஸில் பலமுறை கைதான இவர் மீது ஒரு கொலை வழக்கும் பதியப்பட்டுள்ளது.. சாலைகளிலும் தெருக்களிலும் வம்பிழுத்து, அதன்மூலம் தன்னை ரவுடி போல சித்தரித்து வந்தவர். கஞ்சா வழக்கில் இவரை போலீசார் தேடி வந்தநிலையில், கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாகவும் இருந்தார் பாஸ்கர்..

மிஸ்ஸாயிடுச்சோ
ஆனால், அப்போதும் கஞ்சா விற்பனையை விடாமல் செய்து வந்துள்ளார். அதற்குபிறகுதான், இவரை தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கைது செய்து, சேலம் ஜெயிலில் அடைத்தனர்.. பிறகு, குண்டர் சட்டத்தில் அடைக்க எஸ்பி தீபா சத்யன் கலெக்டருக்கு பரிந்துரை செய்யவும், ஒருவருடம் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.. சேலம், வேலூர் ஜெயில் வாழ்க்கை, தலைமறைவு வாழ்க்கை என்றிருந்த நிலையில், பாலியல் புகாரில் சிக்கி உள்ளது, போக்சோ வரை கொண்டு போய்விட்டுள்ளது அதாவது இரவு 11 மணிக்கு அந்த வீட்டிற்குள் நுழைந்த பாஸ்கர், மறுநாள் அதிகாலை 3 மணி வரை பலாத்காரம் செய்ததாக, அவரது வீடியோ, போட்டோ பதிவு காட்டுகிறதாம். இந்த தம்பதி இப்போது வேலூர் ஜெயிலில் உள்ள நிலையில், விசாரணை நடந்து கொண்டிருக்கிறது..!!

வெளுத்த சாயம்
இதில், கைதான பாஸ்கர் குறித்து மேலும் சில விவரங்கள் தெரியவந்துள்ளது.. இவர்மீது ஏற்கனவே கொலை கேஸ் ஒன்று நிலுவையில் இருந்து வருகிறது.. அதாவது, பாஸ்கர் தன்னுடைய முதல் மனைவியையே கொலை செய்தவராம்.. இரண்டாவது மனைவிதான் துர்கா.. மூத்த மனைவியை பாஸ்கர் மற்றும் துர்காவும் ஒன்றாக சேர்ந்து, அடித்து தாக்கி உள்ளனர்.. அதற்கு பிறகு இருவரும் சேர்ந்து தீயிட்டு கொளுத்தியும் உள்ளனர்.. அந்த கொலை கேஸ் இந்த தம்பதி இருவர் மீதும் இருக்கிறது.. 2 மனைவிகளை திருமணம் செய்து, 3வதாக கணவனை பிரிந்த இந்த பெண்ணுக்கும் பாஸ்கர் ரூட் விட்டதால்தான், துர்காவுக்கு கோபம் வந்துள்ளது.. கஞ்சா கேஸில் பாஸ்கர் சிறை சென்ற நிலையில்தான், துர்காவுக்கும் அந்த பெண்ணுக்கும் வாய்தகராறு இருந்து வந்துள்ளது.. அதனால் பாஸ்கர் சிறையில் இருந்து வெளியே வரும்வரை துர்கா காத்திருந்தாராம்.. பாஸ்கரிடம் கத்தியை தந்து கொலை செய்யவும் அழைத்து சென்றுள்ளார் துர்கா.