தனிக்கட்சி தொடங்கி தினகரன் போட்டியிடுகிறார்.. உறுதி செய்த தங்க தமிழ்செல்வன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  டிடிவி புதிய கட்சி தொடங்குவார்-தங்க தமிழ்ச்செல்வன்- வீடியோ

  திருப்பரங்குன்றம்: தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய தங்க தமிழ்செல்வன் தினகரன் கட்சி தொடங்கி பொது சின்னம் பெற்று வருவிருக்கும் தேர்தல்களில் அமோக வெற்றி பெறுவார் என தெரிவித்துள்ளார்.

  திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் டி.டி.வி.தினகரன் அணியின் மதுரை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக டி.டி.வி.தினகரன் அணியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கலந்து கொண்டார்.

  Dinakaran will conquer the election says Thanga Tamilselvan

  பின்னர் நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், ஜெயலலிதா இருந்த போதும், அதற்கு பின்பும் அ.தி.மு.க.வின் நிலை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது பேசாமல் இருந்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனக்கு முதல்மைச்சர் பதவி கிடைக்கவில்லை என்றதும், ஜெயலலிதா சாவில் மர்மம் இருக்கிறது என்று குற்றஞ்சாட்டுகிறார்.

  மேலும் பேசிய அவர், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வரும். அந்த எம்.எல்.ஏ க்களில் ஒருவர் முதல் அமைச்சராக வருவார் என்று தினகரன் கூறியதை சுட்டிக்காட்டினார். இது தினகரனின் பெருந்தன்மையை காட்டுவதாக கூறிய அவர், விரைவில் தினகரன் முதல் அமைச்சர் ஆவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

  விரைவில் தனிக்கட்சி தொடங்கி, பொது சின்னம் பெற்று 234 தொகுதியிலும் நாம் அமோகமாக வெற்றி பெறுவோம். அதன் பின் எங்கு பார்த்தாலும் நம்முடைய கட்சி, கொடி, சின்னம் தான் இருக்கும் என்றும் அவர் கூறினார். இந்த கூட்டத்தில் மதுரை மாவட்ட அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அனைவரும் கலந்துக்கொண்டனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Dinakaran will conquer the election says Thanga Tamilselvan. He said this in a meeting which has been conducted in Madurai. And also he added soon their party will get new symbol, flag and etc

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற