For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

10ம் வகுப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் 2ம் இடம் பெற்ற மாணவி பிளஸ் டூ தேர்வில் முதலிடம்

Google Oneindia Tamil News

District second in SSLC, First in Plus 2: Tuticorin girl's success journey
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்டத்தில் இரண்டாவது இடம் பிடித்த மாணவி மரிய ஷைனி தற்போது பிளஸ் டூ தேர்வில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் கமாக் பள்ளி மாணவி மரிய ஷைனி முதலிடம் பெற்றுள்ளார். அவர் 1200க்கு 1182 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

மாணவி மரிய ஷைனி மட்டக் கடை பகுதியில் வசித்து வருகின்றார். அவரது தந்தை பொறியாளர் மணிமாறன், தாய் வின்சி ஆவர். மரிய ஷைனி 10ம் வகுப்பு தேர்வில் மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பிளஸ் டூ தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பள்ளி முதல்வர் புஷ்பராணி, தாளாளர் சுபாஷ் சந்திரன் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

English summary
Mariya Shaini who secured second place in Tuticorin district in SSLC exam, has got first place in plus 2 exam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X