For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பள்ளிக் கட்டிடம் திறப்பு விழா-தேமுதிக எம்எல்ஏ பார்த்தசாரதி தொண்டர்களுடன் கைது!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் பள்ளிக் கட்டிட திறப்பு விழா நடத்த அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் பார்த்தசாரதி, நல்லதம்பி உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாலிகிராமத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு பள்ளிக்கு தே.மு.தி.க. எம்.எல்.ஏ. பார்த்தசாரதி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பில், வகுப்பறைகள் கட்டிக் கொடுத்தார். இதன் திறப்பு விழா இன்று (29ஆம் தேதி) நடத்தப்படுவதாக இருந்தது.

விஜயகாந்த் தலைமையில்

விஜயகாந்த் தலைமையில்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் விழா நடப்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து எம்.எல்.ஏ.க்கள் பார்த்தசாரதி, நல்லதம்பி உள்பட 500க்கும் மேற்பட்ட தே.மு.தி.க.வினர் அங்கு குவிந்தனர்.

நிர்வாகம் மறுப்பு

நிர்வாகம் மறுப்பு

இதனை ஏற்காக பள்ளி நிர்வாகம் கல்வி அமைச்சர் தலைமையில்தான் திறப்பு விழா நடக்கும் என கூறி விட்டது. இந்த விழாவை நடத்த அனுமதி பெறவில்லை. எனவே, கட்டடத்தை திறக்கக்கூடாது' என போலீசாரும் கூறியுள்ளார்.

அள்ளிய போலீஸ்

அள்ளிய போலீஸ்

இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

கடைசி நேரத்தில் ரத்து

கடைசி நேரத்தில் ரத்து

இந்த விழாவிற்கு முறைப்படி அனுமதி வாங்கியிருந்தோம். ஆனால், அதை போலீசார் கடைசி நேரத்தில் ரத்து செய்துள்ளனர்'' என தே.மு.தி.க.வினர் குற்றஞ்சாட்டினர்.

எட்டிப்பார்க்காத விஜயகாந்த்

எட்டிப்பார்க்காத விஜயகாந்த்

இத்தனைக்கும் களேபரமும், கைதும் நடைபெற்ற இடம் விஜயகாந்த் வீட்டிற்கு அருகில்தான் நடைபெற்றதாம். ஆனால் தனது கட்சி எம்.எல்.ஏவும், தொண்டர்களும் கைது செய்யப்பட்ட போது எட்டிக்கூட பார்க்கவில்லை.

English summary
DMDK MLA Parthasaray was arrested by police for entering into a school in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X