For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உள்ளாட்சி தேர்தல்: வேலூரில் 54 வார்டுகளில் திமுக போட்டி.. 2வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

By Karthikeyan
Google Oneindia Tamil News

வேலூர்: உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. திருப்பூர், வேலூர் மாநகராட்சிகளில் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கான வார்டுகளை திமுக அறிவித்துள்ளது. அதன்படி வேலூரில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 54 வார்டுகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது திமுக.

தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 26ம் தேதி தொடங்கியது.

DMk candidates list for vellore

திமுக வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. சேலம், திருச்சி, தூத்துக்குடி மாநகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியானது. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் கூட்டணி கட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக திருப்பூர், வேலூர் மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டது. திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகளில், 5, 8, 12, 19 ,20 ,25, 28 ஆகிய 7 வார்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்குக்கு 45 வது வார்டும், மனிதநேய மக்கள் கடசிக்கு 43 வது வார்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 15வது வார்டில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வேலூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 54 வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பெயர்கள்

அறிவிக்கப்பட்டுள்ளன. 9, 13, 24, 35, 53, 54 ஆகிய வார்டுகளுக்கான பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வேலூர் மாநகராட்சியில் திமுக போட்டியிடும் 54 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் விபரம்:

1. 1 வது வார்டு - கே.அன்பு

2. 2 வது வார்டு - எஸ்.சீனிவாசன்

3. 3 வது வார்டு - சித்ரா லோகநாதன்

4. 4 வது வார்டு - டாக்டர் ராஜேஸ்வரி

5. 5 வது வார்டு - வி.சித்ரா

6. 6 வது வார்டு - ஜி.வன்னியராஜா

7.7வது வார்டு - எம்.சுனில்குமார்

8. 8வது வார்டு - எம்.சுதா

9.10 வது வார்டு - எஸ்.ரங்கராஜன்

10. 11வது வார்டு - எஸ்.திலகா சக்திவேல்

11.12 வது வார்டு - பி.ஜெயந்தி

12. 14வது வார்டு - ஜி.சாமுண்டீஸ்வரி

13.15 வது வார்டு - எம்.சீனிவாசன்

14.16வது வார்டு - எம்.இலக்கியா

15. 17வது வார்டு - வி.கோமதி

16.18வது வார்டு - கே.கலைச்செல்வி

17.19வது வார்டு - கோ.யசோதா

18.20 வது வார்டு - ஆர்.பி.ஏழுமலை

19. 21 வது வார்டு - ஜி.அருள்

20. 22வது வார்டு - டி.சக்கரவர்த்தி

21. 23 வது வார்டு - எம்.சேகர்

22. 25வது வார்டு - தங்கமணி ஆனந்தன்

23. 26 வது வார்டு - டி.உஷாதேவி

24. 27 வது வார்டு - கோ.சாந்தி

25. 28வது வார்டு - எல்.கே.சேதுராமன்

26. 29 வது வார்டு - ஆர்.நரேந்திரன்

27. 30 வது வார்டு - ஏ.ஆர். முன்னா ஷரீப்

28. 31வது வார்டு - கே.எம்.கலீல்கான்

29. 32 வது வார்டு - நீதி. ஆர். அருணாச்சலம்

30. 33 வது வார்டு - டி.தவமணி தாமோதிரன்

31. 34 வது வார்டு - டி.திருப்பாவை

32. 36 வது வார்டு - டி.பாஸ்கர்

33.37வது வார்டு - ஆர்.சத்தியமூர்த்தி

34.38 வது வார்டு - ஆர்.விஜயலட்சுமி ராஜா

35. 39 வது வார்டு - ஆர்.கலாவதி

36. 40 வது வார்டு - எஸ்.ரூபாதேவி

37. 41 வது வார்டு - ஜே.யுவராணி

38. 42 வது வார்டு - சி.எம்.தங்கதுரை

39. 43 வது வார்டு - பி.சுதாகர்

40. 44 வது வார்டு - வி.பி.விநாயகம்

41. 45 வது வார்டு - பி.விநாயகம்

42. 46வது வார்டு - பி. கீதா

43. 47 வது வார்டு - ஆர்.கே.ஐயப்பன்

44. 48 வது வார்டு - ஏ.பி.ராமலிங்கம்

45. 49 வது வார்டு - ஜே.உமாராணி

46. 50வது வார்டு - எம்.பாபு

47. 51 வது வார்டு - ஜே.ஜெயபிராகஷ்

48. 52 வது வார்டு - ஆபிதா கானும்

49. 55வது வார்டு - ஏ.ரேகா

50. 56 வது வார்டு - ஏ.சுஜாதா ஆனந்தகுமார்

51. 57 வது வார்டு - கே. மகேஸ்வரி

52. 58 வது வார்டு - எஸ்.ஷண்முகம்

53. 59வது வார்டு - ஐ.வி.பரத்குமார்

54. 60வது வார்டு - விஜயலட்சுமி மோகன்

இப்பட்டியலில் விடுபட்டுள்ள 9, 13, 24, 35, 53, 54 ஆகிய வார்டுகளுக்கான பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

English summary
DMK candidates list local body election for Vellore Here is the list
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X