கூட்டணியில் விரிசலா? திமுகவும் காங்கிரஸும் கணவன் மனைவியாக குடும்பம் நடத்துகிறோம்.. திருநாவுக்கரசர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  திமுகவும் காங்கிரஸும் கணவன் மனைவியாக குடும்பம் நடத்துகிறோம்...வீடியோ

  சென்னை: காங்கிரஸ் கட்சியும் திமுகவும் கணவன் மனைவி போல இணைந்து செயல்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

  சென்னை சத்திய மூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ராஜஸ்தானில் நடைபெற்ற சட்டசபை மற்றும் நடாளுமன்ற இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்தது பாஜகவையும் மோடியையும் பாதித்துள்ளதாக தெரிவித்தார்.

  DMK and congress alliance working together as husband and wife: Thirunavukarasar

  காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றது முதல் கட்சி வேகமாக வெற்றி படிக்கட்டுகளில் ஏற தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறினார். காங்கிரஸ் கட்சியின் வெற்றி மோடிக்கு பயத்தையும் பீதியையும் ஏற்படுத்தியிருப்பதாகவும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

  காங்கிரஸ் திமுகவும் கூட்டணியில் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார். காங்கிரஸும் திமுகவும் திருமணமாகி கணவன் மனைவியாக குடும்பம் நடத்தி வருவதாகவும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Tamilnadu congress leader Thirunavukarasar DMK and congress alliance working togeather as husband and wife.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற