For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை மறுநாள் வெளியாகிறது திமுக தேர்தல் அறிக்கை! அதிரடி கவர்ச்சி திட்டங்கள் இடம்பெறுமா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திமுக தேர்தல் அறிக்கை, நாளை மறுநாள், 10ம் தேதி, கட்சி தலைவர் கருணாநிதியால் வெளியிடப்படுகிறது என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை, அந்த தேர்தலின் கதாநாயகன் என்று கருணாநிதியால் வர்ணிக்கப்பட்டது. இலவச கலர் டிவி உள்ளிட்ட பல கவர்ச்சி அறிவிப்புகளோடு வெளியான அந்த தேர்தல் அறிக்கைக்கு கை மேல் பலன் கிடைத்தது. திமுக ஆட்சியை பிடித்தது.

DMK election manifesto will be release on Sunday, says M.K.Stalin

இப்போதைய சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் முக்கிய கட்சிகள் போட்டியிடுவதால், வாக்குகளை பெற திமுக தனது தேர்தல் அறிக்கையை பெரிதாக நம்பியுள்ளது.

இரு வாரங்கள் முன்பே வெளியிடப்படும் என்று கூறப்பட்டு வந்த தேர்தல் அறிக்கையில் மேலும் பல கவர்ச்சி திட்டங்கள் சேர்க்கப்படும் வேலை நடந்ததால், இப்போதுதான் இறுதியாகியுள்ளதாம்.

இதுகுறித்து, திமுக பொருளாளர் ஸ்டாலின் இன்று அளித்த பேட்டியொன்றில் கூறியதாவது: திமுக தேர்தல் அறிக்கை வரும் 10ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின்போது, திமுக தலைவர் கருணாநிதி, தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்.

திமுக கூட்டணியிலுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்ககான 5 தொகுதிகள் இறுதி செய்யப்ட்டுவிட்டன. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

English summary
DMK election manifesto will be release on Sunday, says M.K.Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X