அய்யய்யோ ஆளவிடுங்க சாமி... கும்பிடுபோட்டு ஓடிய துரைமுருகன்... எதுக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் குறித்து செய்தியாளர்கள் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அய்யய்யோ ஆளவிடுங்க எனக்கூறியபடி ஓட்டம் பிடித்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி மற்றும் எம்ஜிஆர் தீபா பேரவை என மூன்றாக உடைந்தது. சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் கட்சியும் ஆட்சியும் சென்றது பிடிக்காமல் ஏராளமான தொண்டர்கள் பல்வேறு கட்சிகளில் சேர்ந்து விட்டனர்.

DMK former minister Durai murugan ran away after asking the questions about ADMK conflicts

இந்நிலையில் தற்போது சசிகலா அணியும் எடப்பாடி கோஷ்டி, தினகரன் கோஷ்டி என உடைந்து விட்டது. ஒன்றரைக் கோடி தொண்டர்களை கொண்டிருப்பதாக கூறப்படும் அதிமுக சிதைந்து கிடக்கிறது.

அதிமுகவின் உட்கட்சி மோதலால் தமிழக அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் அதிமுகவின் உட்கட்சி மோதல் குறித்து செய்தியாளர்கள் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனிடம் கேள்ளி எழுப்பினர்.

அதற்கு அய்யய்யோ ஆளவிடுங்க சாமி என்று கும்பிடு போட்ட அவர் ஓட்டம் பிடித்து காரில் ஏறிச்சென்றார். அதிமுக குறித்த கேள்விக்கு பதிலளிக்க பயந்து துரைமுருகன் ஓடிய சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK foremer minister Durai murugan ran away after asking the questions sbout ADMK conflicts. He said leave me god and ran away to his car.
Please Wait while comments are loading...