For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு 2 ஆண்டு சிறை!

By Mathi
Google Oneindia Tamil News

DMK MP Selvaganapathy gets 2-year jail term
சென்னை: சுடுகாட்டு கூரைகள் அமைப்பது தொடர்பான ஊழல் வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய தி.மு.க. எம்.பியுமான டி.எம்.செல்வகணபதி உள்பட ஐந்து பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1991- 96 ஆம் ஆண்டில் ஜவகர் யோஜ்கர் ரோஜ்னா வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு செய்ததாக அப்போதைய அதிமுக அமைச்சர் செல்வகணபதி உட்பட 5 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, முன்னாள் அமைச்சரும் தற்போதைய திமுக ராஜ்யசபா எம்.பி.யுமான செல்வகணபதி, ஆச்சார்யலு, சத்தியமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, பாரதி ஆகிய 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார்.

பதவி தப்புமா?

ஊழல் வழக்கில் மக்கள் பிரதிநிதிகள் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் அவர்களது எம்.எல்.ஏ., எம்.பி. பதவி உடனடியாக பறிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்., முன்னாள் மத்திய அமைச்சர் ரசூத் மசூத் ஆகியோரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

தற்போது செல்வகணபதிக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இந்த தீர்ப்பில் வேறு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு 2 ஆண்டுக்கும் மேலாக ஒருநாளானாலும் கூட அவர் பதவி பறிபோய்விடும். இதனால் செல்வகணபதியின் எம்.பி. பதவிக்கு மேலே கத்தி தொங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The former AIADMK Minister and DMK sitting Rajasabha MP TM Selvaganapathy awarded to 2 year jail term in Cremation sheds scam case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X