பலத்த மழை எதிரொலி.. ரேஷன் கடைகள் முன்பு திமுக நடத்த இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கடைகள் முன்பு திமுக நடத்த இருந்த போராட்டம் பலத்த மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் விற்கப்படும் சர்க்கரை விலையை தமிழக அரசு அண்மையில் உயர்த்தியது. இதற்கு தமிழகம் முழுவதும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

DMK protest has been postponed due to heavy rain

பல்வேறு அரசியல் கட்சிகளும் சர்க்கரை விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. சர்க்கரை விலை உயர்வை திரும்ப பெறக்கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்நிலையில் நவம்பர் 6ஆம் தேதியான வரும் திங்கட் கிழமை மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பெரும் கனமழை பெய்து வருவதால் நவம்பர் 6ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK protest has been postponed due to heavy rain. DMK has annouced protest on November 6th against sugar price raise.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற