ஃபோன் "ப்ரீக்கா" நீங்க... மழையில நனஞ்ச கோழியா வந்ததும் இத கண்டிப்பா செய்யாதீங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மழையில் வெளியே சென்று வரும் போதும் போக்குவரத்து நெரிசலின் போதும் அனைவரும் போனும் கையுமாகவே இருப்போம். ஆனால் மழையின் போது செல்போன் பயன்படுத்துபவர்கள் என்னவெல்லாம் செய்யக் கூடாது என்று பார்க்கலாம்.

மழை காலத்தில் அலுவலகத்திற்கு தினமும் விடுப்பு போட முடியாது என்பதால் எப்படியாவது அடித்து பிடித்து சென்று தான் வர வேண்டும். இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத ஆட்களே இருக்க மாட்டார்கள். அதிலும் அலுவலகம் சென்று திரும்பும் சமயத்தில் அவற்றின் பயன்பாடு மிக அதிகம், எப்எம்மில் பாட்டு கேட்பது, யூடியூப் தேடல் என்று மொபைல் பயன்பாடு எக்கச்சக்கமாக இருக்கும்.

ஆனால் மழை நேரத்தில் உங்களது ஸ்மார் போனை பத்திரமாக பார்த்துக் கொள்ளாவிட்டால் அது உங்களுக்கே கூட ஆப்பு வைத்து விடும். மழை காலத்தில் போக்குவரத்தின் போது போனை பத்திரமாக பையில் வைத்து எடுத்து செல்ல வேண்டும். குறிப்பாக மழை, இடி, மின்னல் போன்ற சமயங்களில் செல்போன் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

நனைந்த போனை சார்ஜ் செய்யாதீர்

நனைந்த போனை சார்ஜ் செய்யாதீர்

ஏனெனில் செல்போன் தப்பித் தவறி மழையில் நனைந்து விட வாய்ப்பு இருக்கிறது. அப்படி போன் நனைந்தால் நாம் வெறுமனே மேற்புறத்தில் மட்டும் துடைத்துவிட்டு போனை பயன்படுத்துவோம். ஆனால் இது தவறு மழையில் போன் நினைந்து விட்டால் அந்த ஈரம் பேட்டரி வரை செல்ல வாய்ப்பு இருக்கிறது.

ப்ளூடூத் பெஸ்ட்

ப்ளூடூத் பெஸ்ட்

இதனால் மழையில் போன் நனைந்தால் அதனை முற்றிலுமாக பிரித்து போட்டு காய வைத்த பின்னர் தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் சிலர் செல்போன் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது என்றால் ப்ளூடுத் ஹெட்செட் பயன்படுத்தி போனை காப்பாற்றிக் கொள்ளலாம்.

அரிசிக்குள் போட்டு ஈரத்தை காயவையுங்கள்

அரிசிக்குள் போட்டு ஈரத்தை காயவையுங்கள்

ஒருவேளை போன் நனைந்துவிட்டது என்ன செய்வது என்று தெரியவில்லையா. கவலையை விடுங்க உடனடியாக மாசில்லாத அரிசிக்குள் போனை போட்டு வையுங்கள். அரிசிக்கு ஈரப்பதத்தை உரிஞ்சும் தன்மை இருப்பதால் செல்போனில் இருக்கும் ஈரத்தை அது முற்றிலும் உறிஞ்சிவிடும்.

ஈரத்தோடு சார்ஜ் போடக் கூடாது

ஈரத்தோடு சார்ஜ் போடக் கூடாது

இதே போன்று மழையில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும் செய்யவேக் கூடாத ஒரு விஷயமும் உள்ளது. எக்காரணம் கொண்டும் போனில் ஈரப்பதம் இல்லை என்பது உறுதியாகாத வரை போனை உடனடியாக சார்ஜில் போடக் கூடாது. ஏனெனில் சார்ஜ் சர்க்யூட்டில் ஆரம் இருந்தால் சார்ஜ் போட்டவுடன் போன் சேதமடையவும் சில நேரம் அருகில் இருப்பவருக்கு ஆபத்தை ஏற்படுத்துபவையாகக் கூட மாற வாய்ப்பு உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
What to do and dont's while returning to home while raining, how to safegaurd your cellphone from the rain. Here are some useful tips.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற