வரதட்சணை கொடுமை: மனைவியை கொன்ற கொடூரக் கணவன் தலைமறைவு - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் எரியூரில் வரதட்சணைக்காக தன் மனைவியை கொலை செய்து புதைத்துவிட்டு தப்பியோடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் மரிய பிரகாசம். அவருடைய மகள் அந்தோணி பிரிஸ்தால் விழுப்புரம் மாவட்டம் எரியுரைச் சேர்ந்த வின்சென்ட் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்தோணி பிரிஸ்தால் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

Dowry murder in Viluppuram

ஆனால், திருமணத்துக்கு பிறகு மனைவியிடம் வரதட்சணை கேட்டு வின்சென்ட் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு வின்சென்ட் இதே பிரச்சனைக்காக மனைவியுடன் பிரச்சனை செய்து அவரை கொன்று சுடுகாட்டில் புதைத்துள்ளார்.

இந்நிலையில் மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என அந்தோணி பிரிஸ்தாலின் பெற்றோர் போலீஸில் புகார் தந்தனர். அதனையடுத்து போலீசார் அந்தோணி பிரிஸ்தால் உடலை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். இதனையறிந்த வின்சென்ட் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Near Vilippuram husband killed her wife for dowry and now police searching him.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற