For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜஸ்தான் பிரம்மா கோயிலில் நுழைய ஜனாதிபதிக்கு அனுமதி மறுப்பு.. கோவையில் தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

கோவையில் திராவிடர் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

By T Nandhakumar
Google Oneindia Tamil News

Recommended Video

    கோவையில் தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

    கோவை: குடியரசு தலைவரையே ஜாதியை காரணம் காட்டி கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காத பிரம்மா கோவில் அர்ச்சகரை கைது செய்யக்கோரி கோவையில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் புஷ்கரிலுள்ள பிரம்மா கோவிலை தரிசிப்பதற்காக இந்திய குடியரசுத்தலைவர் தனது மனைவியுடன் சென்றார். ஆனால் அவரை ஜாதியை காட்டி கோயில் நிர்வாகத்தினர் உள்ளே வர அனுமதிக்கவில்லை. இதனால் அவர் கோவிலுக்கு வெளியே கற்பூரம் மட்டும் பற்ற வைத்து சாமி கும்பிட்டு சென்றுள்ளார்.

    dravidar party demonstrations in coimbatore

    இந்த சம்பவம் தேசத்திற்கே அவமானம் எனக்கூறி, திராவிடர் கழகத்தினர் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் அர்ச்சகரை கைது செய்ய வலியுறுத்தியும், அர்ச்சகர் உரிமை சட்டத்தை கொண்டுவர வேண்டியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    English summary
    The President is not allowed in Brahma temple in Rajasthan. So the Dravidar Kazhagam demonstrated in Coimbatore. They urged to arrest the priest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X