ஆர்கே நகர் இடைத்தேர்தல் தேதி... விரைவில் அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் தேதி விரைவில் வெளியாகக் கூடும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வராக இருந்த ஜெயலலிதா டிசம்பர் மாதம் காலமானார். இதையடுத்து ஆர்கே நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெறு என அறிவிக்கப்பட்டது.

களத்தில்...

களத்தில்...

அதிமுகவின் ஓபிஎஸ் கோஷ்டி மதுசூதனனையும் சசிகலா கோஷ்டி டிடிவி தினகரனையும் திமுக மருதுகணேஷையும் வேட்பாளர்களாக களமிறக்கினர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, பாஜகவின் கங்கை அமரன் உள்ளிட்டோரும் போட்டியிட்டனர்.

ஐடி ரெய்டு

ஐடி ரெய்டு

தீவிர பிரசாரம் நடைபெற்று வந்த நிலையில் தினகரன், வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

தேர்தல் ரத்து

தேர்தல் ரத்து

இச்சோதனையில் ஆர்கே நகர் தொகுதியில் ரூ89 கோடிக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கின. இதையடுத்து ஆர்கே நகர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

விரைவில் அறிவிப்பு?

விரைவில் அறிவிப்பு?

தற்போது ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத் தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. விரைவில் ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Delhi Sources said that the Election Commission will announce the RK Nagar By poll date very soon.
Please Wait while comments are loading...