எஸ்எம்எஸ் வரும் முன்னே... கரண்ட் கட் ஆகும் பின்னே... - மின்துறையின் அடடா திட்டம்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பராமரிப்பு பணிக்காக மின்சாரம் துண்டிக்கப்படும்போது அதுகுறித்து நுகர்வோருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் உதவியுடன் நுகர்வோருக்கு மின்சாரத்துறை, அந்தத்தப் பகுதியில் ஏற்படும் மின்வெட்டு குறித்து எஸ்.எம்.எஸ் அனுப்பும் திட்டத்தை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார். அப்போது அவர், இனி வரும் நாட்களில் பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தப்படும்போது நுகர்வோருக்கு உடனே எஸ்.எம்.எஸ் அனுப்பட்டும் என கூறினார்.

Electricity department will intimate in advance about power cut

மேலும் மின்சாரத்துறை சம்பந்தமாக அனைத்து வேலைகளையும் ஆன்லைனில் செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது எனவும், இனிமேல் மின்சார இனைப்பை ஒரே நாளில் பெறும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்தார். ஆனால், அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்த விவரங்களும் எஸ்.எம்.எஸில் அனுப்பப்படுமா என்பது குறித்து எதுவும் அவர் கூறவில்லை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Electricity department will intimate in advance about power cut during maintenance work told minister Thangamani.
Please Wait while comments are loading...