For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முன்னாள் தமிழக ஆளுநர் ரோசையா டூ புதிய ஆளுநர் புரோஹித்- ஒரு ப்ளாஷ்பேக்!

முன்னாள் தமிழக ஆளுநர் ரோசையா இருந்தது முதல் இன்று புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் வரை நடந்தது என்ன என்பது குறித்த ஒரு பிளாஷ்பேக் தொகுப்பு.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் தமிழக ஆளுநர் ரோசையாவின் பதவிக்காலத்துக்கு பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் குறித்த செய்தி தொகுப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் ஆளுநராக ஆந்திரா முன்னாள் முதல்வர் கே.ரோசையா கடந்த 2011-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரது பதவிக்காலம் 2016-இல் முடிவடைந்தது.

EX Governor Rosaih to New governor Purohit- A Flashback

இதைத் தொடர்ந்து புதிதாக பொறுப்பு ஆளுநராக மகாராஷ்டிரத்தின் ஆளுநர் நியமிக்கப்பட்டிருந்தார். தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும் என்று பலதரப்பு கோரிக்கைகளுக்கு பிறகு, மேகாலயா மாநில ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் இன்று நியமிக்கப்பட்டார்.

இதற்கிடைப்பட்ட காலத்தில் நடந்த சுவாரஸ்யமான திருப்புமுனைகள் குறித்த ஒரு பார்வை இங்கே விவரிக்கப்பட்டுள்ளது.

செப்.2,2016- தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் நியமனம்
செப்.3- ஆளுநர் மாளிகையில் வித்யாசாகர் ராவுக்கு வாழ்த்து தெரிவித்தார் ஜெயலலிதா
செப்.22- உடல்நலக் குறைபாடு காரணமாக ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
அக்.1- ஜெயலலிதாவை சந்திக்க அப்பல்லோ சென்றார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்
அக்.22- ஜெயலலிதாவின் உடல்நிலையை விசாரிக்க 2-ஆவது முறையாக அப்பல்லோ சென்றார் வித்யாசாகர் ராவ்.
டிச.5- சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா மரணமடைந்து விட்டார்.
டிச.5- இரவோடு இரவாக முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்றுக் கொண்டார்
டிச.6- பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ஆளுநர்
பிப்.5, 2017- முதல்வர் பதவியை ஓபிஎஸ் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
பிப்.6- ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு கடிதமாக அனுப்பினார் ஓபிஎஸ்
பிப்.7-ஜெயலலிதா சமாதியில் தியானம் மேற்கொண்ட ஓபிஎஸ். சசிகலா குடும்பத்தினர் நிர்பந்தித்ததால் ராஜினாமா செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு
பிப்.9- தனி அணியாக செயல்பட்ட ஓபிஎஸ் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளுநரை சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரினார். சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரினார்
பிப்.14- சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேரிட்டது.
பிப்.16- ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி. அன்றே அவர் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவு
பிப்.18- நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியதில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றார்
பிப்.19- சட்டசபையில் ஏற்பட்ட அமளியில் கிழிந்த சட்டையோடு ஆளுநரிடம் புகார் அளித்தார் ஸ்டாலின்
ஆக.21- அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தது. எடப்பாடி, ஓபிஎஸ்ஸின் கைகளை சேர்த்து வைத்தார் ஆளுநர்
ஆக.21- துணை முதல்வராக ஓபிஎஸ்ஸுக்கு பதவி பிரமாணம்
ஆக.22- முதல்வர் மீது நம்பிக்கையில்லை எனக் கூறி ஆளுநரை சந்தித்து ஆதரவை வாபஸ் பெற்றனர் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்
ஆக.27- திமுகவினர் ஆளுநரை சந்தித்து சட்டசபையை கூட்டி எடப்பாடி பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட கோரிக்கை
ஆக.30- அதிமுகவின் உள்கட்சி பிரச்சினையில் தலையிட முடியாது என ஆளுநர் கைவிரிப்பு
செப்.1 - அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டார்
செப்.19- தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம்
செப்.25- ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன்
செப்.30- புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நிரந்தர ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்

English summary
A flashback from Ex governor Rosaiah from New Governor Purohit. What was the things happened in between these period?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X