தினகரன் அணிக்கு ஜூட் விட்டார் மாஜி எம்எல்ஏ வேலூர் ஞானசேகரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமாகாவில் இருந்து நீக்கப்பட்டதால் 2016ல் அதிமுகவில் சேர்ந்த மாஜி எம்எல்ஏ ஞானசேகரன் தினகரன் அணிக்கு பறந்துள்ளார். சென்னையில் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்த ஞானசேகரன் தினகரனால் மட்டுமே அதிமுகவை வழிநடத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவான வேலூர் ஞானசேகரன் ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளர். காங்கிரசில் இருந்து வாசன் வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கிய போது அந்தக் கட்சியில் இணைந்தார். தமிழ் மாநில காங்கிரசில் ஞானசேகரனுக்கு துணைத்தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டது.

EX MLA Gnanasekaran joins in TTV Dinakaran camp

ஞானசேகரன் அதிமுவிற்கு போக உள்ளதாக வெளியான தகவலையடுத்து கடந்த 2016ம் ஆண்டில் அவரை துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கி வாசன் அறிவிப்பு வெளியிட்டார். இதனையடுத்து வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த தமாகா நிர்வாகிகளுடன் 2016 ஜெயலலிதா முன்னிலையில் போயஸ்கார்டனில் அதிமுகவில் இணைந்தார்.

சிறந்த பேச்சாளரான ஞானசேகரன் அடுத்தடுத்த அரசியல் மாற்றங்களால் அமைதியாக இருந்து வந்தார். இந்நிலையில் சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டில் அவரை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தினகரனுக்கு மக்கள் நல்ல வரவேற்பு அளிக்கின்றனர்.

தினகரன் கூட்டும் கூட்டங்களில் மக்கள் வெள்ளமென திரண்டு வருகின்றனர். உளவுத்துறையே அதிரும் வகையில் தினகரனின் சுற்றுப்பயணத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருக்கிறது. நிச்சயமாக தினகரன் தலைமையில் அதிமுக செயல்படும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்றும் ஞானசேகரன் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
EX MLA Gnanasekaran who joins ADMK on 2016 now jumped into TTV. Dinakaran facction and he hopes people is welcoming Dinakaran massly, he only lead ADMK in future.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற