For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருத்துவர் எனக்கூறி போலியாக மருத்துவமனை நடத்திய பெண் கைது…

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: பள்ளிக்கூடமே போகாமல் ஆறு ஆண்டுகளாக டாக்டராக செயல்பட்ட பெண் கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெளியுலக தொடர்புகள் அதிகமில்லாத பல மலைக் கிராமங்கள் உள்ளது. வேப்பனப்பள்ளி, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் ஆகிய மலைகள் சூழ்ந்த சுற்றுவட்டார கிராமங்களில் அதிகளவில் போலி மருத்துவர்கள் நடமாட்டம் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது.

இதையடுத்து மாவட்டம் முழுவதும் சோதனை செய்ய சுகாதரத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் ராஜேஷ் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் தமிழரசன் தலைமையிலான அதிகாரிகள் சூளகிரி அடுத்த செம்மன்குளி என்ற கிராமத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த கிராமத்தில் படிப்பறிவே இல்லாமலும், அரசு அனுமதியின்றியும் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த நாகராஜ் என்பவரின் மனைவி சுகுணா என்பவரை கைது செய்தனர்.

எந்த விதமான கல்வித்தகுதியிம் இல்லாமல் கடந்த ஆறு ஆண்டுகளாக சுகுணா இந்த பகுதியில் மருத்துவமனை நடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Police arrested a lady who was served fake doctor in Krishnagiri district. She ran a hospital there more than 6 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X