பட்டப்பகலில் மகள் கண் எதிரில் கேபிள் டிவி அதிபர் வெட்டி கொலை.. மேற்கு மாம்பலத்தில் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையில் மகள் கண்ணெதிரே தந்தை வெட்டி கொலை- வீடியோ

  சென்னை: மேற்கு மாம்பலத்தில் பட்டப்பகலில் கேபிள் டி.வி. அதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மேற்கு மாம்பலம் நாயக்கர்மார் தெருவில் வசித்து வந்தவர் கந்தன் (47). அந்த பகுதியில் கேபிள் டி.வி. நடத்தி வந்தார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டிருந்தார்.

  இதனால் அவர் சுற்றுவட்டாரத்தில் பலருக்கும் பழக்கமானார். இந்த நிலையில், இன்று காலை சுமார் 7.30 மணிக்கு கந்தன் தனது மகள் கீர்த்தனா என்பவரை பைக்கில் கல்லூரிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

  'லேக் வியூ' சாலை பகுதியில் இவர்கள் சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் இருவர் ஹெல்மெட் அணிந்தபடி வேகமாக வந்தனர். அவர்கள் வேண்டுமென்றே கந்தனின் பைக்கை வழிமறித்தபடி வந்து அதன் மீது மோதினர். இதனால் கந்தன் தடுமாறி தனது மகளுடன் கீழே விழுந்தார். அவர் எழுந்திருப்பதற்குள் 2 மர்ம நபர்களும் அவரை கழுத்திலும், முகத்திலும், தலையிலும் சரமாரியாக வெட்டினர்.

  தடுக்க முயன்ற மகள்

  தடுக்க முயன்ற மகள்

  இதைப்பார்த்து பீதியடைந்த கீர்த்தனா, தனது தந்தையை வெட்டியவர்களை தடுக்க தீரத்தோடு முயன்றாார். அப்போது அவரது கையையும் கொலையாளிகள் இரக்கமின்றி வெட்டினர். இதன்பிறகு அந்த கொலையாளிகள் அங்கிருந்து பைக்கில் தப்பியோடினர். அதிகப்படியான வெட்டு காயங்களால் துடித்த கந்தன், அதே பகுதியில் உயிரிழந்தார்.

  காயமடைந்த இளம் பெண்

  காயமடைந்த இளம் பெண்

  சம்பவத்தை பார்த்த சிலர் கீர்த்தனாவை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். குமரன் நகர் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அந்தப் பகுதியில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். பைக்கில் கொலையாளிகள் தப்பியோடியபோது, சற்று தூரத்தில் நின்ற ஒரு ஆட்டோவும் பைக்குடன் சேர்ந்து கிளம்பியுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.

  பயங்கர திட்டம்

  பயங்கர திட்டம்

  அந்த ஆட்டோவில் 2 பேர் இருந்ததாக கண்ணால் பார்த்த சிலர் தெரிவித்துள்ளனர். அவர்கள் தான் கொலைக்கு சூத்திரதாரிகளாாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஒருவேளை பைக்கில் சென்ற கொலையாளிகளிடம் கந்தன் தப்பினால், ஆட்டோவில் இருந்தவர்கள் அவரை விரட்டி கொலை செய்ய திட்டமிட்டு காத்திருந்திருக்கலாம் என தெரிகிறது.

  சாட்சிகளிடம் விசாரணை

  சாட்சிகளிடம் விசாரணை

  பைக்கில் வந்த இரு கொலையாளிகளும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் சரியாக அடையாளம் தெரியவில்லை. ஆட்டோவில் இருந்தவர்கள் முகத்தை சிலர் பார்த்துள்ளதாக தெரிகிறது. கந்தன் மீது ஏற்கனவே போலீசில் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே இது பழிக்கு பழியாக நடந்த கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

  மக்கள் கூட்டம்

  மக்கள் கூட்டம்

  மேற்கு மாம்பலத்தில் கொலை நடந்த இடத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்படியிருந்தும் கொலையாளிகள் மக்களை பற்றி கவலைப்படாமல் தங்களது கொடூர செயலை அரங்கேற்றியுள்ளனர். சென்னையில் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம் என மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

  பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

  English summary
  A murder took place in West Mambalam area during the broad day light. A crowd of people gathered at the place of murder at West Mambalam. The two killers who came to the bike did not identified as they were wearing helmet.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற