கனரா வங்கியில் மின்கசிவால் தீவிபத்து.. எரிந்து நாசமான ஆவணங்கள் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள கனரா வங்கியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அதில் வாடிக்கையாளர்களின் முக்கிய ஆவண்க்கள் உள்பட பலகோடி மதிப்பிலான ஆவணங்கள் எரிந்து நாசமாகின.

திருப்பூர் பல்லடம் சாலையில் அமைந்துள்ளது கனரா வங்கி. இங்கு மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டது. . வாடிக்கையாளர்கள் கடன் பெறுவதற்காக சமர்ப்பித்த வீட்டுப் பத்திரங்கள் உள்பட பல ஆவணங்கள் எரிந்து நாசமாகின.

Fire accident in canara bank Tirupur

அங்கு கட்டிடங்கள் நெருக்கமாக இருந்ததால், தீ அடுத்த கட்டிடத்துக்கு பரவும் வாய்ப்பு அதிகம் இருந்தது. ஆனால் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தினால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த தீ விபத்து குறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Tirupur Canara bank, fire accident due to leakage in electricity. Most of the important documents fired and become waste.
Please Wait while comments are loading...