For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விராலிமலையில் ஜெயலலிதாவுக்கு சிலை திறப்பு.. தொண்டர்கள் மலர் தூவி அஞ்சலி!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழகத்திலேயே முதல்முறையாக 10 அடி உயர வெண்கல சிலை விராலிமலையில் அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் முயற்சியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Google Oneindia Tamil News

விராலிமலை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழகத்திலேயே முதல்முறையாக 10 அடி உயர வெண்கல சிலை விராலிமலையில் நிறுவப்பட்டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் முயற்சியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

First Statue in Tamilnadu for Jayalalitha!!

முதல்வர் ஜெயலலிதா மறைந்து 20 நாட்களுக்கு மேலாகியும் மெரினா கடற்கரையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மறைந்த முதல்வருக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்திலேயே முதல்முறையாக விராலி மலையில் மறைந்த முதல்வருக்கு 10 அடி உயரத்தில் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அமைச்சர் விஜயபாஸ்கர் முயற்சியில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த சிலைக்கு அப்பகுதி மக்கள் ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த 10 அடி உயர வெண்கல சிலை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
For the first time in Tamil Nadu 10 feet high bronze statue is erected in Viralimalai for Chief Minister Jayalalithaa. The statue is set up in an effort of minister Vijayabaskar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X