சென்னை பள்ளிக்கரணையில் மீன் வியாபாரி வெட்டிப் படுகொலை - பட்டப்பகலில் பயங்கரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிக்கரணையில் மீன் வியாபாரி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணைப் பகுதியைச் சேர்ந்தவர் மீன்வியாபாரி சீனிவாசன். 55 வயதான இவர் இன்று காலை வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.

Fish trader murder in Chennai pallikaranai

அப்போது அவரை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் சீனிவாசனை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த கொலை குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் போட்டியில் கொலை நிகழ்ந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Fish trader murder in Chennai pallikaranai. Police have filed complaint against 5 persons about the murder.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற