கணவர் கழுத்தில் கத்தியை வைத்து மனைவி, தங்கையை பலாத்காரம் செய்த ரவுடிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையில் மகள் கண்ணெதிரே தந்தை வெட்டி கொலை- வீடியோ

  சென்னை: வியாசர்பாடியில் கணவன் கழுத்தில் கத்தியை வைத்து மனைவி மற்றும் தங்கையை ரவுடிகள் பாலியல் பலாத்காரம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிரிப்பாய் சிரித்து வருகிறது. தொடர் கொலை, கொள்ளை வன்முறை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

  சென்னை அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரண்டு மூதாட்டிகள் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டனர். இதேபோல் கடந்த மாதம் ரவுடி விஜி மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார்.

  மகள் கண்முன்னே பயங்கரம்

  மகள் கண்முன்னே பயங்கரம்

  இன்று காலையில் கூட சென்னை மேற்கு மாம்பலத்தில் பட்டப்பகலில் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் கேபிள் டிவி உரிமையாளர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். மகளின் கண்முன்னே இந்த சம்பவம் நடைபெற்றது.

  கணவன் கழுத்தில் கத்தி

  கணவன் கழுத்தில் கத்தி

  இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் சென்னை வியாசர்பாடியில் இன்று மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை வியாசர்பாடி திடீர் நகரில் வசித்து வருஙம இளைஞர் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து ரவுடிகள் மிரட்டியுள்ளனர்.

  மனைவி தங்கை பலாத்காரம்

  மனைவி தங்கை பலாத்காரம்

  பின்னர் அவரின் கண் எதிரெ அவரது மனைவி மற்றும் தங்கையை ரவுடிகள் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள எம்கேபி நகர் போலீசார், சதீஷ், அஜய், பப்லு, ராஜேஷ் என்ற 4 ரவுடிகளை தேடி வருகின்றனர்.

  மக்களிடையே அதிர்ச்சி

  மக்களிடையே அதிர்ச்சி

  மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  முதலிடம் பிடித்த சென்னை

  முதலிடம் பிடித்த சென்னை

  அண்மையில்தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்தது. இந்நிலையில் கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மனைவி மற்றும் தங்கை பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படூத்தியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Four rowdys raped two woman Chennai Viyasarpadi. The rowdys were keeping knife on the neck of husband and raped wife and his sister.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற