
பட்டப்பகலில் வக்கீலுக்கு அரிவாள் வெட்டு,,, சென்னையில் பயங்கரம்… மர்ம கும்பல் தப்பியோட்டம்
சென்னை; பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டியுள்ளது. சென்னை கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கேசவன் சென்னை கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் 2 சக்கர வாகனத்தில் அந்தப் பக்கம் வந்து அவர் மீது மோதியுள்ளது.

அப்போது நிலை தடுமாறிய கேசவனை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சரிமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த வழக்கறிஞர் கேசவன் ஆயிரம் விளக்கில் உள்ள ஒரு தனியார் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வழக்கறிஞர் கேசவனை தாக்கிய கும்பல் குறித்தும், இந்தத் தாக்குதலுக்கான பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.