தகுதி நீக்க வழக்கு சூடு தணிந்ததால் சென்னையிலிருந்து நாக்பூர் செல்கிறார் ஆளுநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் சற்று தணிந்த நிலையில் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாக்பூர் செல்கிறார்.

முதல்வருக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கடிதம் கொடுத்த நாள் முதல் தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் 18 எம்எல்ஏக்களும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

Governor today leaves to Nagpur

இதனிடையே பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநருக்கு உத்தரவிட கோரி மு.க.ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல் 18 எம்எல்ஏக்களும் தகுதிநீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கும், மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கும் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்கப்பட்டது. அதேவேளையில் தகுதிநீக்கத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மேலும் 18 தொகுதிகளுக்கும் மறு தேர்தல் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை அடுத்து தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை 3.30 மணிக்கு சென்னையிலிருந்து நாக்பூர் புறப்படுகிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Amid polictical sensational in TN, Governor Vidyasagar Rao leaves to Nagpur from Chennai today.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற