For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டவிரோத காவலில் பக்ருதீன்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

HC sends notice to Govt on Fakruddeen custody
சென்னை: பக்ருதீனை சட்ட விரோத காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட மனுவிற்கு வரும் 30ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இந்து தலைவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்ட போலீஸ் பக்ருதீனும் அவரது கூட்டாளிகளும் காவல்துறையினரின் தீவிர விசாரணைக்கு பின்னர் தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பக்ருதீனை சட்டவிரோத காவலில் அடைத்து வைத்திருப்பதாகவும், பன்னா இஸ்மாயிலை பார்க்க மனைவிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய தேசிய லீக் செயலாளர் அப்துல் ரஹீம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதிகள், பக்ருதீன் விவகாரத்தில் காவல்துறையினர் பாரபட்சமாக செயல்படுவதாக கண்டனம் தெரிவித்தனர்.

பக்ருதீனை சந்திக்க வழக்கறிஞருக்கு அனுமதி தந்தது குறித்தும் கேள்வி எழுப்பினர். மேலும், பன்னா இஸ்மாயிலை சந்திக்க அவரது மனைவிக்கு அனுமதி மறுத்தது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக வரும் 30க்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

English summary
Madras HC has ordered to issue notice to the govt of Tamil Nadu on the alleged illegal arrest of Fakruddeen
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X