For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாற்றுத்திறனாளி மாணவியை வெளியேற்றிய அரசுப்பள்ளி… மீண்டும் சேர்க்க உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: காது கேளாத காரணத்தால் பேராவூர் அரசு பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்ட தலித் மாணவி முத்துலட்சுமியை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம் அருகே உள்ள இளமனூர் ஊராட்சிகுட்பட்டது பழங்குளம். இந்த ஊரை சேர்ந்தவர் அழகர் (55). பேராவூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கமலா. வாய் பேச முடியாதவர்.

இவர்களுக்கு ஒரு மகன் 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் மணிவேலுக்கு திருமணம் ஆகி விட்டது. இளைய மகள் முத்துலெட்சுமிக்கு 16 வயதாகிறது. படித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு காது கேட்பது குறைந்து கொண்டே வந்து திடீரென காது முழுமையாக கேட்காம் போய் விட்டது. இதனால் வகுப்பில் பாடம் நடத்துவதை கேட்க முடியாத நிலை ஏற்பட்டது.

Hearing impaired girl back in school

டிசி கொடுத்த தலைமைஆசிரியை

காது கேட்காததால் வகுப்பில் பாடங்களில் கவனம் செலுத்த முடியாத நிலையில் இதைக் கண்டுபிடித்த ஆசிரியை முத்துலட்சுமியை எல்லா மாணவர்கள் மத்தியிலும் அவமானப்படுத்தியதோடு இனி வகுப்பு வரவேண்டாம் என்று சொன்னதோடு, அந்தப் பள்ளியை விட்டே துரத்த தலைமையாசிரியரிடம் பரிந்துரைத்திருக்கிறார். மகளுக்காக தந்தை கெஞ்சியதையும் காதில் வாங்காத செவிடாய் தலைமையாசிரியரும் முத்துலட்சுமியிடம் டிசி கொடுத்து அனுப்பியிருக்கிறார்.

மாவட்ட ஆட்சியர் உதவி

தன் குடும்பத்தின் சூழலை கருத்தில் கொண்டு தன்னார்வ நிறுவத்தின் மூலம் தையல் கற்றுக் கொண்டார். தையல் மிஷின் வாங்க நிதி கேட்டு ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனுகொடுத்த போது, 15 வயது தொழில் தொடங்கும் வயதல்ல என்று சொல்லி விசாரித்திருக்கிறார்கள். அப்போதுதான் முத்துலட்சுமி தனக்கு நேர்ந்த அவலத்தை சொல்லியிருக்கிறார். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் தையல்மிஷின் என்று கூறிய மாவட்ட ஆட்சியர் புதிய காது கேட்கும் கருவியை வாங்க பரிந்துரைத்துள்ளார்.

கல்வி அதிகாரிகள் விசாரணை

இந்நிலையில், இதுபற்றிய தகவல் அறிந்த ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஜெயக்கண்ணு, பேராவூர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். முத்துலட்சுமி மற்றும் அவருடைய பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியர் ஆகியோரிடம் டி.சி. கொடுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தினார்.

இடைநிற்க யார் காரணம்

விசாரணையின்போது, ''காது கேட்கும் கருவி மாட்டிக் கொண்டு வர முத்துலட்சுமி தயங்கியதால் பள்ளிக்கு வராமல் இருந்ததாகவும், அதனால் பாதியில் படிப்பை நிறுத்திவிட்டதாகவும்" ஆசிரியர்கள் தரப்பில் கூறியுள்ளனர்.

மாணவியை சேர்க்க உத்தரவு

எந்த சூழலிலும் பள்ளி மாணவர்கள் இடைநிற்க ஆசிரியர்கள் காரணமாக இருக்கக் கூடாது என எச்சரித்த முதன்மை கல்வி அலுவலர், முத்துலட்சுமியை மீண்டும் பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, முத்துலட்சுமி பேராவூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

மாணவி விரும்பவில்லை

ஆனால், கடந்த சில மாதங்களாக பள்ளிக்கு செல்ல முடியாமல் இருந்த நிலையையும், தனக்கு உள்ள குறைபாட்டினையும் எண்ணிய முத்துலட்சுமி, மீண்டும் படிக்க செல்ல விருப்பம் இல்லை என முதன்மை கல்வி அதிகாரியிடம் கூறியுள்ளார். ஆனாலும் விடாமல் முத்துலட்சுமியை சமாதானப்படுத்திய முதன்மை கல்வி அலுவலர், வேண்டுமானால் இன்னும் இரண்டு, மூன்று நாள் அவகாசம் எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வருமாறு கூறி அனுப்பியுள்ளார்.

உளவியல் சிகிச்சை

மேலும், முத்துலட்சுமியின் தயக்கத்தை போக்கும் வகையில் அவரிடம் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்து சொல்லி, பள்ளிக்கு மீண்டும் அனுப்புமாறு முத்துலட்சுமியின் பெற்றோரிடமும் முதன்மை கல்வி அலுவலர் கூறியுள்ளார்.

ஆசிரியர்களுக்கு தண்டனை என்ன?

முத்துலட்சுமி மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டாலும், அதனை ஏற்றுக்கொண்டு முன்புபோல பள்ளிக்கு செல்ல முத்துலட்சுமி ஆர்வம் இல்லாமல் இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதற்கு காரணம் அப்பள்ளியின் ஆசிரியர்களே. முத்துலட்சுமியை மனிதத் தன்மையற்ற முறையில் நடத்தியதோடு அவருக்குரிய அடிப்படை உரிமை பறித்த அந்த அசிரியையும் இதில் தொடர்புடைய மற்ற ஆசிரியர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள், என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

English summary
Muthulakshmi, a 15-year-old Dalit girl suffering from partial hearing loss, who was forced to leave school after her hearing aid stopped working, the Education Department re-admitted her in Class X on Tuesday and offered to arrange counselling for her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X