சென்னையில் மீண்டும் கனமழை- புறநகர்களில் இடியுடன் வெளுக்கிறது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நகரின் பல இடங்களில் கனமழை மீண்டும் வெளுத்து வாங்குகிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை உக்கிரமாக கொட்டி வருகிறது. தொடர் மழையால் சென்னை மற்றும் புறநகர்களில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியே உள்ளன.

Heavy rain lashes Chennai News

மழைநீர் வெளியேறுவதற்கான கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் மக்கள் பெரும் துயரத்துக்குள்ளாகி உள்ளனர். இந்த கனமழை சென்னையில் பகலில் ஓய்ந்து இருந்தது.

சில மணிநேர இடைவேளைக்குப் பின்னர் சென்னை மற்றும் புறநகர்களில் கருமேகங்கள் சூழத் தொடங்கின. மாலையில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராமாபுரம், போரூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது.

சென்னை புறநகர்களில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது. கனமழையால் சென்னை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Heavy rains lashed several parts of Chennai city on Thursday Night.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற