For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

27 ஆண்டுகள் கழித்து 7 தமிழர் விடுதலை.. வழக்கு கடந்த வந்த பாதை

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேர் கைது செய்யப்பட்டது முதல் அவர்களை விடுவிக்க தீர்மானம் போட்டது வரை நடந்தது என்ன?

கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது அவர் படுகொலை செய்யப்பட்டார். முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மே 20, 1992: பூந்தமல்லியில் தடா நீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்து சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிறப்பு விசாரணை குழு.

Here are important events of Rajiv Gandhi assasination case

1998, ஜன 28: இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேருக்கு தடா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது

1999, மே 11: இதில் நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையையும், மற்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனையையும் மீதமுள்ள 19 பேரை விடுவித்தும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

1999, அக்டோபர் 8- முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

அக்.17: தமிழக ஆளுநருக்கு 4 பேரும் கருணை மனு அளித்தனர்.

அக் .27: கருணை மனுக்களை ஆளுநர் நிராகரித்தார்

நவ.25: கருணை மனுக்களை ரத்து செய்து ஆளுநர் உத்தரவை சென்னை ஹைகோர்ட் நிராகரித்தது. மேலும் சட்டபேரவையின் கருத்துகளை பெற்று புதிய உத்தரவை பிறப்பிக்குமாறு ஆளுநருக்கு உத்தரவிட்டது ஐகோர்ட்.

2000, ஏப். 19- நளினியின் தூக்கு தண்டனையை குறைக்குமாறு அப்போதைய முதல்வர் கருணாநிதி பரிந்துரை செய்தார்.

ஏப். 21- கருணாநிதியின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றார்.

ஏப். 28: அதே போல் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவருக்கு மாநில அரசு பரிந்துரை செய்தது.

2008 மார்ச் : நளினியுடன் பிரியங்கா காந்தி வேலூர் சிறையில் சந்திப்பு

ஆகஸ்ட் 12, 2011- கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பாட்டில் ரத்து செய்துவிட்டதாக தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சரம் தெரிவித்தது.

ஆகஸ்ட் 26: கடந்த 2011-செப்டம்பர் 9-ஆம் தேதி சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிட தேதி குறிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 30: மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு தமிழக அரசு ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து மூவரின் தூக்கு தண்டனை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த கருணை மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பியது.

2012, மே 1: மூவரின் பேரின் மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டது.

2014, பிப்.14- மூவரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதையடுத்து அவர்களை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டது.

பிப். 19: சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரை விடுவிக்க சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

மார்ச்: தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு .இதையடுத்து 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்

டிசம்பர் 2015: 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு என உச்சநீதிமன்றம் கருத்து

மார்ச் 2016- 7 பேரை விடுவிப்பது குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

ஏப்ரல் 2016- தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு

ஜனவரி 2018- 7 பேரை விடுவிப்பது குறித்து மத்திய அரசு 3 மாதத்துக்குள் முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

2018, செப் 6: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து மத்திய அரசின் வழக்கை முடித்து வைத்தது.

செப். 9: தமிழக அமைச்சரவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று கூடியது. அப்போது ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

English summary
The Rajiv Gandhi assassination case has witnessed several twists and turns during past 27 years. Here are the chronological events.Today Government passed resolution to release them as soon as possible.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X