கள்ளக்காதல் படத்தை பெண்களே கொண்டாடுவதை பார்த்தால்.. இனி குடும்ப வாழ்க்கை அவ்வளவுதானா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  லட்சுமி... சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறாள்?- வீடியோ

  சென்னை: சர்ஜுன் இயக்கத்தில் வெளியான 'லக்ஷ்மி' குறும்படம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

  இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 'ஒன்றாக என்டர்டெயின்மென்ட்' என்ற யூ-ட்யூப் சேனலில் இந்த வெளியாகியுள்ளது. இது பெண் விடுதலை என்று சிலர் கருத்து கூறும்போதிலும், பலரும் இது பெண்களை மோசமாக சித்தரிப்பதாக கூறுகிறார்கள்.

  பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும் லட்சுமியிடம் பாரதியார் கவிதை சொல்லி ஒரு இளைஞன் ஈர்ப்பதும், அதையடுத்து அந்த இளைஞனுடன் உடலுறவு கொள்வதும் பெண்களை மோசமாக சித்தரிக்கும் செயல் என்ற கருத்தும் மேலோங்கியுள்ளது.

  அதேநேரம், கணவனிடம் அன்பு கிடைக்கவில்லை என்பதால் பெண் இப்பிட செல்வதாக காட்டுவதாகவும் சிலர் கூறுகிறார்கள். அதிலும்  சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ள பெண்கள் சிலர் இதை ஆதரித்து பதிவிட்டுள்ளனர்.

  அரவணைப்பில்லை

  இதுகுறித்து சபரிநிவாஸ் இளங்கோவன் என்பவர் பேஸ்புக்கில் கூறியதை பாருங்கள்: அதிகாலை எழுந்து,சமைத்து முடித்து,வீட்டு வேலைகளை முடித்து கணவனையும், குழந்தையையும் அனுப்பிவிட்டு, தானும் வேலைக்கு சென்று சோர்வடைந்து வந்து எவ்வித அன்பும் அரவணைப்புமின்றி இரவில் கணவனின் உடல் பசியை ஆற்றிவிட்டு, தன் உடல் பசியை ஆற்ற தன் கணவனால் இயலவில்லையே என்ற ஆற்றாமையில் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில் தனது கணவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு என்றும் தெரிந்ததும் மனதளவில் பாதிக்கப்படுகின்றாள் லெக்‌ஷ்மி. நிற்க..!

  அரவணைப்பு

  அரவணைப்பு

  ஆதரவற்று நிற்கும் நிலையில் கூட தன் கணவன் தன்னை பற்றி கவலைகொள்ளாமல் அதிகாலை சமையலுக்கு என்ன செய்வது என? கேட்கும் அந்த கேள்வியில் மனமுடைந்து நிற்கையில் தனக்காகவே இருக்கும் ஒரு "முன் பின் நவீனத்துவ" கவிஞனின் அரவணைப்பு கிடைக்கின்றது.

  குழந்தைக்கு அம்மா

  குழந்தைக்கு அம்மா

  சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த அவனுக்குள் இருந்த அமைதிப்படை அமாவாசையானவன் அல்வா ரூபத்தில் சிறிது உப்புமாவை சாப்பிடக்கொடுத்து பசியாற்றிவிட்டு, பாரதியார் பாடல்களை பாடி அவளை பரவசமடைய செய்து படுக்கைக்கு அழைக்கையில்... "உங்க சமையலும், பாரதியார் பாடலும் நல்லா இருந்துச்சி, ரொம்ப சந்தோஷமா இருந்தேன், பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக நான் வாழ வேண்டும் என்றால், வீட்டில் எனக்காக காத்திருக்கும் என் மகனின் அம்மாவாகவே நான் வீட்டுக்கு போக ஆசைப்படுகின்றேன், அதனால் கொஞ்சம் தள்ளி இருங்க" என கூறிவிட்டு அங்கிருந்து அவள் எழுந்து செல்லும்படி காட்சி வைக்கப்பட்டிருந்தால் நிச்சயம் அந்த லெக்‌ஷ்மி கொண்டாடப்பட்டிருப்பாள்.

  கணவனுக்கும், மனைவிக்கும் வித்தியாசம் இல்லை

  கணவனுக்கும், மனைவிக்கும் வித்தியாசம் இல்லை

  அந்த கணவன் துப்பப்பட்டிருப்பான். ஆனால் இப்போது அந்த கணவனுக்கும், இந்த மனைவிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை, இவர்களுக்கு பிறந்த பிள்ளை தான் பாவம். இது போன்ற புரட்சிப்படங்களை கொண்டாடும் இந்த சமூகத்தையும், பெண்களையும் பார்க்கையில் ஒன்று மட்டும் தெரிகின்றது, இனிவரும் காலங்களில் ஒரு நல்ல குடும்ப வாழ்க்கை வாழ்வது என்பது கேள்விக்குறியாக தான் இருக்கும். "என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா - பாரதியார்".

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Here is a netizen comment on Lakshmi short film, which deals feminism.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற