பெயருக்கு ஏற்ப பெருந்தன்மையோடு கரையை கடக்குமா நாடா புயல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெயர் சூட்டும் நடைமுறைக்கு பிறகு உருவாகியுள்ள 45வது புயல், நாளை மறுநாள் அதிகாலை தமிழகத்தை கரையை கடக்க போகும் நாடா ஆகும்.

ஒரே சமயத்தில் இரண்டு பகுதிகளில் ஏற்படும் புயல் சின்னங்களை வேறுபடுத்திக் காட்ட புயல் சின்னங்களுக்கு பெயர் சூட்டும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நடைமுறையை அறிமுகப்படு்ததிய நாடு ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலிய வானிலை இலாகா அதிகாரிகள் குசும்புக்காரர்களாக இருக்க வேண்டும். ஏனெனில், மக்களிடம் செல்வாக்குக் குறைந்த அரசியல்வாதிகளின் பெயர்களை புயல்களுக்கு சூட்டி மகிழ்ந்தனவர் அவர்கள்.

2004 முதல் பெயர் சூட்டுகிறோம்

2004 முதல் பெயர் சூட்டுகிறோம்

1954ம் ஆண்டுக்கு பிறகு, அமெரிக்காவும் இந்த நடைமுறைய பின்பற்றத் தொடங்கியது. அமெரிக்கா பின்பற்றத் தொடங்கி 50 ஆண்டுகளுக்குப் பிறகு 2004ம் ஆண்டு இந்தியாவும் இந்த நடைமுறைக்குள் வந்தது. வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டும் முறை 2004ல் துவங்கியது. அதற்கு முன்பாக, வங்கக்கடலில், அல்லது அரபிக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளது என்றுதான் வானிலை இலாகா அறிவித்து வந்தது.

நாடுகளின் கூட்டமைப்பு

நாடுகளின் கூட்டமைப்பு

புயலுக்கு பெயர் சூட்டுவதற்காகவே, இந்தியா, மாலத்தீவு, ஓமன், பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, இலங்கை ஆகிய 8 நாடுகள் இணைந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தின. இந்த நாடுகள் இணைந்து, தாங்கள் விரும்பும் பெயர்களை பரிந்துரைத்து ஒரு பட்டியல் உருவாக்கப்படும். இதில் ஒவ்வொரு புயலுக்கும் ஒவ்வொரு பெயர் அடுத்தடுத்து சூட்டப்படுகிறது.

நாடா புயல்

நாடா புயல்

வங்கக் கடலில் தற்போது நாடா புயல் உருவாகியுள்ளது.பெயர் வைக்கும் முறை அறிமுகமாகி இது 45வது புயல். தற்போதைய புயல் பெயர் பட்டியலில் 64 பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஓமன் நாட்டு வானிலை இலாகா அதிகாரிகள் பரிந்துரைப்படி, இந்த புயலுக்கு நாடா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. லத்தினை பூர்வீகமாக கொண்ட இந்த வார்த்தைக்கு, ஒன்றுமில்லை (nothing)என்று பொருளாகும்.

வறட்சியை ஒன்றுமில்லாமல் போகச் செய்யுமா?

வறட்சியை ஒன்றுமில்லாமல் போகச் செய்யுமா?

வறட்சியை, பஞ்சத்தை ஒன்றுமில்லாமல் போகச் செய்து, செழிப்பை தமிழகத்திற்கு பரிசளிக்குமா இந்த நாடா புயல் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும், நாடா என்ற சொல்லுக்கு அரபி மொழியில், பெருந்தன்மை என்ற பொருள் உண்டாம். ஓமன் அரபு மொழி அர்த்தத்தில்தான் இந்த பெயரை சூட்டியிருக்கும் என நம்பலாம். எனவே தமிழகத்தில் மழையை மட்டுமே கொடுத்து, அழிவை தவிர்த்து பெருந்தன்மையாக இந்த புயல் கரையை கடக்கும் என நம்புவோமாக.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Here is the meaning for Cyclone name Nada, which likly to cross Tamil Nadu coast on Friday.
Please Wait while comments are loading...