"ஸ்லீப்பர் செல்"களை களையெடுக்கப்போகும் தலைமை.. யார் தலை உருளப் போகுதோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எங்க ஆளுங்க ஸ்லீப்பர் செல்களாக அந்த பக்கம் இருக்காங்க என்று எதிர் முகாமில் இருந்து சொன்னபோது, இல்லை இல்லை அப்படி எல்லாம் எதுவுமே இல்லை என்று ஆளும் தரப்பில் இருந்து அடிச்சு பேசுனாங்க. இப்போ அந்த ஸ்லீப்பர்கள் இருப்பதை கண்டுபிடித்து விட்டார்களாம்.

இலைக்காக தேர்தல் ஆணையத்தில் முட்டி மோதிக்கிட்டு இருக்காங்க. அந்த பஞ்சாயத்து ஜவ்விழுப்பாக இழுத்துக்கொண்டிருக்கிறது. இலையை கைப்பற்றிய உடன் முதல் வேலையாக ஸ்லீப்பர் செல்களை களையெடுக்கப் போகிறார்களாம்.

அமைச்சரவையில் சிலர் தலை உருளப் போகிறதாம். அமாவாசையில் இணைந்த அணிகள், அடுத்த அமாவாசைக்காக காத்திருக்கிறார்களாம். பூட்டுக்கு பேர் போன ஊர், பட்டாசுக்கு பேர் போன ஊர் என முக்கிய அமைச்சர்களை லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறார்களாம்.

சைலண்ட் மோடில் அமைச்சர்கள்

சைலண்ட் மோடில் அமைச்சர்கள்

பேச்சு பேச்சா இருக்கணும் என்று சொன்னது போய், பேச்சே ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவதால் பலரையும் வாயை மூடி பேசவும் என்று தலைமை உத்தரவு போட்டிருக்கிறதாம். இதனால் இப்போதெல்லாம் பல அமைச்சர்கள் ஆளை விடுங்கப்பா சாமிகளா என்று மவுன விரதம் இருக்க ஆரம்பித்து விட்டனர்.

ஸ்லீப்பர் செல்கள்

ஸ்லீப்பர் செல்கள்

அவர்கள் எல்லாம் ஆகாதவர்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தாலும் சிலர் அப்பப்போ மறைமுகமாக பேசுவது உளவுத்துறை மூலமாக தலைமைக்கு போய்கொண்டுதான் இருக்கிறதாம்.

யார் கொடுக்கும் தைரியம்

யார் கொடுக்கும் தைரியம்

ஸ்லீப்பர் செல்கள் இருக்கிற தைரியத்தில்தான் 'தை பிறந்தா வழி பிறக்கும்' என்று தாளம் போட்டு போடுகிறார் கரனார். ஸ்லீப்பர் செல்களையே களையெடுத்து விட்டால் அப்போ என்ன செய்வாராம் என்று கேட்டு விட்டு நமட்டு சிரிப்பு சிரித்தாராம் இந்த அணி தலைவர்.

அமாவாசையில்அறுவடையா?

அமாவாசையில்அறுவடையா?

எது எப்படியோ ஐப்பசி முடியப்போகுது... கார்த்திகை முடிஞ்சு மார்கழி போய், தை பிறந்தா வழி பிறக்குமா? அல்லது கார்த்திகை அமாவாசையில் களையெடுத்து விட்டு தை மாசம் எதிரிகளை அறுவடை பண்ணப்போறாங்களா என்று ஆள் ஆளுக்கு பேசிக்கொள்கிறார்களாம்.

இன்னைக்கு இவ்வளவுதான். மத்த கதையை அப்புறம் சொல்றோம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sources say that the party High command has decided to eiliminate sleeper cells out of party after getting the party symbol.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற