மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு... தியேட்டர்கள் முன் இந்து மக்கள் கட்சியினர் போராட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி பற்றி வரும் கருத்தை நீக்கக் கோரி இந்து மக்கள் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மெர்சல் திரைப்படத்தில் வரும் சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் இல்லாவிட்டால் தமிழகத்தில் மெர்சல் ஓடும் தியேட்டர்களின் முன்பு பே௱ராட்டம் நடத்துவே௱ம் இதில் அனைத்து இந்து இயக்கங்களும் போராட்டத்தில் கலந்து கொள்கின்றன இந்த போராட்டத்தில் தொண்டர்கள் திரளாக கலந்து கெ௱ள்ள வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன்சம்பத் அறிக்கை விடுத்தார்.

Hindu Makkal Katchi protest Against ‘Mersal’

இதனையடுத்து தமிழகத்தில் மெர்சல் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் முன்பாக காலை முதலே போலீஸ் குவிக்கப்பட்டது.

ராயப்பேட்டையில் பிரபல தியேட்டர் முன்பாக இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல தமிழகம் முழுவதும் முக்கிய தியேட்டர்கள் முன்பாக இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Hindu Makkal Katchi protest in front of theatres screening Mersal till scenes criticising GST are removed. Sampath and his followers have condemned Atlee and the film’s star Vijay for criticising PM Modi.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற