For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசுப் பணி எட்டாக்கனியா?.. நோ பாஸ்.. ஜஸ்ட் லைக் தட் எட்டிப் பிடிக்க முடியும்!

Google Oneindia Tamil News

சென்னை: இன்றைய காலகட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தம்மை தயார் செய்து கொண்டிருக்கும் அல்லது தயார் செய்யப்போகும் மாணவர்கள் அனைவரும் அடிப்படை கல்வி தகுதி உடையவர்களாகவும் பட்டப்படிப்பு முடித்தவர்களாகவும் மிகுந்த ஆளுமைத் திறன் உடையவர்களாகவும் திகழ்கின்றனர் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.

இருப்பினும் அவர்களிடத்தில் மனவலிமை குன்றி இருப்பதை நம்மால் உணர முடிகிறது. அரசுப் பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வை தேர்ச்சி பெற்று எப்படியாவது அரசுப்பணியை எட்டிப்பிடிக்க வேண்டும் என்று அனைத்து மாணவர்களும் வெற்றி படிக்கட்டை ஏறிக்கொண்டுதான் இருக்கிறார்கள், ஏனெனில் அரசுப்பணி என்பது மிகுந்த புகழ் தரக்ககூடியது என்பதால் அனைவருக்கும் அது ஒரு பெரிய கனவாகவே உள்ளது.அந்த கனவு மெய்ப்பட தம்மை பயிற்சியில் ஆட்படுத்தி தயார் செய்யும் மாணவர்களின் மனநிலை எப்பொழுதும் நிலையானதாக இருப்பதில்லை என்பதை உறுதியாகக் கூற முடியும்.

How to face competiton exams?

கல்லூரி படிப்பை முடித்த கையோடு அரசுப்பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் மாணவர்களும் இருக்கின்றனர் , கல்லூரி படிப்பை படித்துக்கொண்டிருக்கும் வேளையில் அதற்கு இணையாக போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்கள் மற்றும் தனியார் பணியில் இருந்து கொண்டே அரசாங்கப்பணிகளுக்கான தேர்வை எதிர்கொள்பவர்களும் இருக்கின்றனர். இவ்வாறாக தேர்வுக்களம் என்பது மிகுந்த போட்டி நிறைந்தே உள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் மாணவர்களிடத்தில் நாம் தோற்றுவிடுவோமோ என்ற அச்சம் மிகுந்து காணப்படுகிறது. ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் முயற்சி செய்து அரசுப்பணி கிடைக்கவில்லை என்றால் இச்சமூகம் நம்மை தரக்குறைவாக எண்ணி விடுமோ அல்லது தேர்வாணையம் நிர்ணயம் செய்த வயது வரம்பை விட தேர்ச்சி பெறுவதற்குள் நம்முடைய வயது வரம்பு மீறிவிடுமோ என்ற அச்சமும் அவர்களை தினந்தோறும் துரத்திகொண்டுதான் இருக்கிறது.இதனால் ஒரு சில மாணவர்கள் தன்னம்பிக்கை இழந்து பயற்சி மேற்கொள்ளவே தயங்குகிறார்கள்.இத்தகைய சவால்களை மாணவர்கள் எதிகொள்வதற்கான காரணம் அவர்களிடத்தில் மனவலிமை இல்லமால் இருப்பதே ஆகும்.

இவ்வகையான தேர்வுக்கு தம்மை தயார் செய்யும் மாணவர்கள் பயிற்சிக்கான புத்தகத்தை சேர்க்கும் முன்பு மனவலிமையையும் மன உறுதியையும் தம்மிடத்தில் சேர்க்க வேண்டும். என்னால் இந்த தேர்வினை எதிர் கொள்ள முடியும் என்னால் இந்த தேர்வினை தேர்ச்சி பெற்று அரசுப் பணியை எட்டிப்பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்கள் மனதில் எழ வேண்டும். இந்த எண்ணம் இல்லை என்றால் கிழக்கில் உதிக்கும் சூரியன் தன் திசை மாற்றி மேற்கில் உதித்தாலும் அவர்களால் தேர்வில் தேர்ச்சி பெற முடியாது. மாணவர்கள் எதிர் கொள்ளும் அடுத்த சவால்களில் ஒன்று, அரசுப்பணிகளுக்கான காலியிடங்களை தேர்வாணையம் அறிவிக்கும்பொழுது அவர்களுக்குள் ஒரு பெருத்த அச்சம் ஏற்படுகிறது.

உதாரணமாக ஒரு அரசுப் பணிக்கான காலியிடங்களை தேர்வாணயம் பத்தாயிரம் என்று அறிவுக்கிறது என்று எடுத்துக் கொள்வோம். ஆனால் அதற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை பல லட்சம் என்று கூறும் பொழுது மாணவர்கள் தன்னம்பிக்கைய இழக்கிறார்கள்,இச்சமயத்தில் மாணவர்கள் மிகவும் தெளிவாக செயல்பட வேண்டும்., ஏனெனில் விண்ணப்பிக்கும் அனைவரும் போதுமான பயிற்சி பெற்று தேர்வை எதிர்கொள்ள போவதில்லை. அதிர்ஷ்டவசமாக நாம் தேர்ச்சி பெற்று விட்டால் நமக்கு அரசு பணி கிடைக்கும் என்று அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை உடையவர்கள்தான் அந்த பல லட்சம் பேர். விண்ணப்பிக்கும் பல லட்சம் நபர்களில் அதிகபட்சம் பத்து சதவிகிதம் விண்ணப்பதாரர்கள்தான் உண்மயான போட்டியாளர்கள் என்பதை மாணவர்கள் மனதில் தெளிவாக பதிய வைத்து கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்று மற்றவர்களிடம் ஆலோசனை கேட்பது. என்னவென்றால், இந்த தேர்வினை என்னால் ஆறு மாத காலத்தில் அல்லது ஒரு வருட காலத்தில் தேர்ச்சி பெற முடியமா?. இதற்கான பதில் சொல்பவர்களில் இரு வகை உண்டு. ஒரு சாரர் அவர்களுக்கு ஊக்கத்தை கொடுக்கும் வகையிலும் மற்றொரு சாரார், நான் கடந்த இரண்டு வருடமாக இத்தேர்வுக்கு பயிற்சி மேற்கொண்டு வருகிறேன், என்னால் ஒரு முறை கூட தேர்ச்சி பெற முடியவில்லை. நீங்கள் ஆறு மாதம் பயிற்சி மேற்கொண்டு எப்படி தேர்ச்சி பெற முடியும் என்று தன்னம்பிக்கையை இழக்கும் வகையிலும் சொல்வார்கள். போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்யும் மாணவர்கள் தங்களின் பயிற்சி கால அவகாசத்தை மற்றவர்கள் நிர்ணயம் செய்ய அனுமதி வழங்க கூடாது.

போட்டித்தேர்வை வெல்வதற்கான கால அவகாசம் என்பது பள்ளிப்படிப்பை போலவோ கல்லூரி படிப்பை போலவோ நிர்ணயம் செய்யப்பட்ட ஒன்று என்று அவர்கள் எண்ணக்கூடாது. எனது பயிற்சிக்கான கால அவகாசத்தை என்னால் மட்டும்தான் நிர்ணயம் செய்ய முடியும் மற்றவர்களால் அல்ல என்பதை எவன் ஒருவன் உணர்கிறானோ அவனே விரைவில் தேர்வில் வெற்றி பெற முடியும். மூன்று மாதம் பயிற்சி மேற்கொண்டு தேர்வில் வெற்றி பெற்றவர்களும்உண்டு. இரண்டு வருடம் , மூன்று வருடம் பயிற்சி பெற்று தேர்வில் தோல்வியுற்றவர்களும் உண்டு. போட்டித்தேர்வில் வெற்றி பெறுவதற்கான கால அவகாசம் என்ற ஒன்று இன்று வரை யாராலும் நிர்ணயிக்கப்படவில்ல மற்றும் நிர்ணயிக்கபடப்போவதும் இல்லை என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இது மட்டுமல்லாமல் போட்டிதேர்வுகளுக்கு தயார் செய்யும் மாணவர்களுக்கு consistency என்று சொல்லக்கூடிய நிலைப்புத்தன்மை மிகவும் அவசியம். ஒரு முறை தோற்று விட்டோம் இரண்டு முறை தோற்று விட்டோம் என்று தன் முயற்சியை கைவிடக்கூடாது, ஆயிரம் முறை தோற்றாலும் ஆயிரதொன்றாவது முறை போட்டிக்களத்தில் இறங்கும் மனவலிமை அவர்களிடத்தில் இருக்க வேண்டும்.

இவ்வாறாக போட்டி தேர்வுகளுக்கு தம்மை தயார் செய்யும் மாணவர்கள் தங்கள் மன உறுதியை வளர்த்துக்கொண்டு பிறகு தேர்வுக்கான பயிற்சியை மேற்கொண்டால் நீங்கள் எட்டாக்கனி என்று நினைக்ககூடிய அரசுப்பணியை உங்களால் எட்டிப்பிடிக்க முடியும்.

- சாந்தி பழனிசாமி

English summary
Here are some tips for facing the stiff challenges in writing competiton exams.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X