பணம் கொடு..கட்டிய மனைவியிடமே மிரட்டல்! செல்போன் முழுவதும் ‘அந்த’ வீடியோ! வெலவெலத்த பெரம்பலூர்!
பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே வரதட்சனை கேட்டு கட்டிய மனைவி என்றும் பாராமல் ஆபாச படம் எடுத்து மிரட்டிய கணவனை காவல்துறையினர் கைது செய்த நிலையில் இதே போல பல பெண்களிடம் வீடியோ எடுத்து பணம் பறித்து வந்தது தெரிய வந்திருக்கிறது.
சமூக வலைதளங்களின் ஆதிக்கம் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் அன்றாட நிகழ்வுகள் தொடங்கி அனைத்தையும் வீடியோவாக எடுத்து பேஸ்புக் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது பலரது வழக்கமாக உள்ளது.
காலையில் 70 தொடங்கி தூங்கச் செல்வது வரை பேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் ஸ்டேட்டஸ் வைக்காவிட்டால் பலருக்கு தூக்கமே வராது. மேலும் புகைப்படங்களை விட பலருக்கு வீடியோக்களை வெளியிடுவதில் தான் ஆர்வம் அதிகம்.

வீடியோ சைக்கோ
காமெடி நடனம் சமையல் என ஒவ்வொன்றையும் வீடியோ எடுத்து அதனை பேஸ்புக்கில் பதிவிட்டால் கிடைக்கும் என்பதற்காக பலர் விபரீத செயல்களிலும் ஈடுபடுவார்கள். அந்த வகையில் ஒரு சைக்கோ கணவன் தனக்கும் தனது மனைவிக்குமான அந்தரங்க நிகழ்வுகளை வீடியோ எடுத்ததோடு அதனை மனைவியிடமே காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளர். போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் பல பெண்களிடம் இது போல் அவர் பணம் கேட்டு மிரட்டியதும் அம்பலமாகியிருக்கிறது.

பெண் டாக்டர்
பெரம்பலூர் கோனேரிபாளையம் பாரதி நகர் பகுதியில் சேர்ந்த 25 வயதான பெண் ஹோமியோபதி டாக்டர் ஒருவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விமல் என்ற 31 வயது இளைஞனுக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று இருக்கிறது. செப்டம்பர் மாதம் திருமணம் நடந்த நிலையில் டிசம்பர் மாதத்திலேயே விமலின் கோரமுகம் வெளிவர தொடங்கி இருக்கிறது. வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவி என்று பாராமல் அவரை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அடித்து துன்பப்படுத்துவதோடு அருவருக்கத்தக்க வார்த்தைகளால் வசைப்பாடி இருக்கிறார்.

தினமும் டார்ச்சர்
தான் கஷ்டப்படுவது தனது பெற்றோர் வீட்டுக்கு தெரிந்தால் கவலைப்படுவார்கள் என நினைத்து அந்த பெண்ணும் அதுகுறித்து சொல்லாமலே இருந்திருக்கிறார். இந்த நிலையில் 50 சவரன் நகையும் 5 லட்சம் ரூபாய் பணமும் வரதட்சணையாக தர வேண்டும் என கணவன் டார்ச்சர் செய்ய ஆரம்பித்து இருக்கிறான். இதற்கு அவனது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் ஒரு நாள் எதார்த்தமாக கணவனின் செல்போனை எடுத்து பார்த்திருக்கிறார் அந்த ஹோமியோபதி டாக்டர் மனைவி.''

ஆபாச வீடியோ
அப்போது பல பெண்களுடன் அவர் அந்தரங்கமாக இருந்த வீடியோக்களும் புகைப்படங்களும் இருந்தது தெரியவந்தது. மேலும் அவரது வாட்ஸாப் உரையாடலை கவனித்த போது பல பெண்களை அந்த வீடியோக்களை வைத்து மிரட்டி பணம் கேட்டதும் தெரிய வந்திருக்கிறது. அதிர்ச்சியின் உச்சமாக தனது மனைவியுடன் தனிமையில் இருந்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் விமல் எடுத்து வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அந்தப் பெண் டாக்டர் இது குறித்து கணவனிடம் கேட்டபோது தனக்கு வரதட்சணை பணத்தை தரவில்லை என்றால் இந்த வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளானர்.

அதிரடி கைது
இதனால் அதிர்ந்து போன அந்த பெண் டாக்டர் இதுகுறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் கணவர் விமல் அவரது தந்தை இளங்கோவன் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிய மனைவியிடம் ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய சைக்கோ கணவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரம்பலூரில் பலத்த அதிகாரிகளை ஏற்படுத்தி இருக்கிறது.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications