என்னை ஒதுக்குவீர்களா? உங்களை கட்சியில் இருந்து தூக்கிடுவேன்.. அமைச்சர்களுக்கு டிடிவி எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னை கட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாக கூறும் அமைச்சர்களையே நீக்கும் அதிகாரம் என்னிடம் மட்டுமே உள்ளது என்று தினகரன் அகங்காரத்துடன் பேட்டி அளித்தார்.

அதிமுகவில் இருந்து அமைச்சர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட தினகரன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையத்துக்கு பணம் கொடுத்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் தன்னை தனது இல்லத்தில் சந்திக்க வரும் ஆதரவாளர்களை தினமும் அவர் சந்தித்து வருகிறார். கட்சி அலுவலகத்துக்கு செல்லாமலேயே வீட்டிலேயே தர்பார் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தினகரனிடம் கட்சியை ஒப்படைக்குமாறு அவர் ஆதரவு எம்எல்ஏ-க்கள் முதல்வர் எடப்பாடியிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும் கட்சி சார்பில் நடத்தப்படும் இப்தார் நோன்பில் கலந்து கொள்ளுமாறு தினகரனுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

 பின்வாங்கவில்லை

பின்வாங்கவில்லை

எனினும் தினகரனை எடப்பாடி கோஷ்டியினர் ஒதுக்கி வைப்பதிலிருந்து பின்வாங்குவதாக தெரியவில்லை. அவர்கள் இப்தார் நோன்புக்கு தினகரனை அழைக்கவில்லை. இந்நிலையில் திகாரில் இருந்து வந்தவுடன் எடப்பாடி அணியினரின் செயல்பாடு குறித்து சித்தி சசிகலாவை நேரில் சந்தித்து தெரிவித்தபோது அவர் 60 நாள்களுக்கு பொறுமை காக்குமாறு கூறியுள்ளார். தனது அடுத்த கட்ட அரசியல் பிரவேசம் குறித்து தினகரன் சென்னையில் பேட்டி அளித்தார்.

 எல்லா என்கிட்டதான்....

எல்லா என்கிட்டதான்....

அப்போது அவர் கூறுகையில், கட்சியின் பொதுச் செயலாளரான சசிகலா செயல்பட முடியாத நிலையில் உள்ளார். இதனால் அவரால் துணைப் பொதுச் செயலாளராக உள்ள எனக்கே எல்லா அதிகாரமும் உள்ளது. என்னை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக கூறுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.

 அறியாத அமைச்சர்கள்

அறியாத அமைச்சர்கள்

அமைச்சர்கள் சிலர் இதுபோல் கூறுவது அவர்களது அறியாமையை காட்டுகிறது.இந்த அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது என்பதை அவர்களிடமே கேட்டு சொல்லுங்கள். என்னை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக கூறும் அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் துணை பொதுச் செயலாளராகிய எனக்கே உண்டு. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி என்னால் அமைச்சர்களை நீக்க முடியும்.

 கட்சி அலுவலகத்துக்கு விரைவில்...

கட்சி அலுவலகத்துக்கு விரைவில்...

விரைவில் கட்சி தலைமை அலுவலகத்துக்கு செல்வேன். எதற்கும் நான் அஞ்சாதவன். எந்த வழக்காக இருந்தாலும் துணிச்சலுடன் எதிர்கொள்ள தயார் என்றார் அவர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran says that he has the authority to remove the ministers who told sidelined me.
Please Wait while comments are loading...