சென்னை ஜார்ஜ் டவுன் ப்ராசர் பிரிஜ் ரோடு இனி டிஎன்பிஎஸ்சி சாலை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உள்ள முக்கிய சாலைகளுக்கு புதிய பெயர் சூட்டப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி ஜார்ஜ் டவுன் ப்ராசர் பிரிஜ் ரோடு இனி டிஎன்பிஎஸ்சி சாலை என அழைக்கப்படும்.

உள்ளாட்சி தேர்தல் இன்னும் நடத்தப்படாததால் தற்போது சென்னை மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகள் யாரும் இல்லாமல் சிறப்பு அதிகாரி மூலம் செயல்படுகிறது. இந்நிலையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் சிறப்பு அதிகாரிகள் கவுன்சில் மூலம் சென்னையில் உள்ள முக்கிய சாலைகளுக்கு புதிய பெயர் சூட்டப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

In Chennai important roads name has been changed

சென்னையில் முக்கிய சாலைகளில் உள்ள அரசு நிறுவனங்களின் பெயரை வைக்க சிறப்பு அதிகாரிகள் கவுன்சில் முடிவு செய்துள்ளது. அதன்மூலம் சென்னை ஜார்ஜ் டவுண் ப்ராசர் பிரிஜ் ரோடு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சாலை அதாவது டிஎன்பிஎஸ்சி சாலை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் அலுவலகம் அந்த சாலையில் செயல்படுவதால் அந்த சாலைக்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் எழும்பூர் மாண்டியத் ரோடு, 'ரெட் கிராஸ் ரோடு' என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த சாலையில் செஞ்சிலுவை சங்கம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Chennai important roads name has been changed according to the companies which is located in the road. The george town road name changed into TNPSC road.
Please Wait while comments are loading...